ஆளுநர் ரவியின் 'ஜாதி பாகுபாடு புகார்'- 'சனாதன ஒழிப்பு' சர்ச்சையில் உதய்நிதி

post-img

சென்னை: தமிழ்நாட்டில் ஜாதிய பாகுபாடு கடைபிடிக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார்; அந்த ஜாதிய பாகுபாடு நீடிப்பதால்தான் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்கிறோம் என தமிழ்நாடு அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.


தஞ்சாவூர் அருகே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய பேச்சு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் ரவி அந்நிகழ்ச்சியில் பேசுகையில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிக ஜாதிய பாகுபாடுகள், வன்முறைகள் நடைபெறுகின்றன. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஜாதிய பாகுபாடு காட்டப்படுகிறது.


மேலும் தலித்துகள் சமைத்த உணவை சாப்பிட மறுப்பது, குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது ஆகிய நிகழ்வுகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமது பேச்சில் சுட்டிக்காட்டி இருந்தார்.

 

இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன சொல்கிறாரோ அதனைத்தானே நாங்களும் சொல்கிறோம். அந்த ஜாதிய பாகுபாடு இருப்பதால்தானே சனாதனத்தை ஒழிப்போம் என்கிறோம். அதனால்தான் ஜாதிய ஒடுக்குமுறைகளை அழிப்போம் என்கிறோம். எங்களைப் பொறுத்தவரை பிறப்பால் அனைவரும் சமம் என்பதுதான் கொள்கை. ஜாதிய ஒடுக்குமுறைகள், கொடுமைகள் எங்கு நிகழ்ந்தாலும் அது தவறுதான். அத்தகைய ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றார்.


முன்னதாக திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியதாவது: வட இந்தியாவில் தலித்துகள் மீது சிறுநீர் கழிக்கிற ஜாதிய கொடுமை நிகழ்கிறது. ஆனால் அதனை யாருமே கேள்வி கேட்பது கிடையாது. இதுதான் ஆளுநர் ஆர்.என்.ரவியின் சமூக நீதி கோட்பாடு போல.. ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்படும் போது ஆளுநர் ரவி என்ன மாதிரியாக எதிர்வினையாற்றுகிறார்? யாருக்கும் தெரியாது.


தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒரு ஆளுநராக செயல்படாமல் இருக்கிறார். ஒரு ஆளுநரின் கடமை என்ன? மாநில சட்டசபைகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது என்பதுதான். ஆனால் அந்த கடமையை செய்யாமல் ஆர்.எஸ்.எஸ்.க்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறார் என கூறியிருந்தார்.

 

Related Post