சென்னை: கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.. தமிழகத்திலுள்ள பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இந்த தனிநபர் கடன் உச்சவரம்பானது, ரூ.15 லட்சத்திருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய குடும்ப சூழலில், மருத்துவ செலவு, திருமணம், மருத்துவ செலவு, புதிதாக வீடு கட்டுதல், சொந்தமாக தொழில் தொடங்குவது என பல்வேறு காரணங்களுக்காக பணத்தேவை அதிகரித்துள்ளது.
இதில், வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு தமிழக அரசின் தாட்கோ நிறுவனம் கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறு வணிக கடன் என்ற திட்டத்தின் மூலம் குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. நபர் ஒருவருக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வீதம் சிறு வணிக கடன் வழங்கப்படுகிறது.
உதவித்திட்டம்: அதேபோல, சிறு, குறு, நடுத்தர தொழில் நடத்துபவர்கள் தங்கள் நிறுவனத்தை மேம்படுத்தும் வகையில் 'கலைஞர் கடன் உதவி' திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில்தான், குறைந்த வட்டியில் 20 லட்சம் ரூபாய் வரை தனி நபர் கடன் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது, பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்கள் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் உச்சவரம்பினை 15 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பதிவாளர்கள்: இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் நா.சுப்பையன், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ளார். அந்த அறிவிப்பில் உள்ளதாவது:
"கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தனிநபர் கடன் உச்ச வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்த கோரிக்கைகள் வரப்பெற்றன. இந்த கோரிக்கைகள் பெறப்பட்டதைத் தொடர்ந்து பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்களால் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் உச்ச வரம்பினை ரூ.15/- இலட்சத்திலிருந்து ரூ.20/- இலட்சமாக கீழ்கண்ட நெறிமுறைகளைப் பின்பற்றி உயர்த்தி வழங்கிட அனுமதிக்கப்படுகிறது.
தவணைக்காலம்: கடனைத் திருப்பிச் செலுத்தும் தவணைக் காலம் 120 மாதங்களுக்குட்பட்டு இருத்தல் வேண்டும். உறுப்பினர்களின் வயது வரம்பினையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதிகபட்சக் கடன் அளவு ரூ.20/- (இருபது) இலட்சம் அல்லது உறுப்பினர் பெறும் மொத்த சம்பளத்தில் 25 மடங்கு இதில் எது குறைவோ அத்தொகை கடனாக வழங்கப்பட வேண்டும். உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 5% பங்குத் தொகையாக வசூலிக்கப்பட வேண்டும்.
பணியாளர்களின் மொத்த ஊதியத்திலிருந்து அனைத்து பிடித்தங்களும் மேற்கொள்ளப்பட்டு பணியாளர் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளம் அவருடைய மொத்த ஊதியத்தில் 25%-க்குக் குறைவாக இருக்கக் கூடாது.
புதிய உச்சவரம்பு: பணியாளர்கள் பணிபுரியும் அலுவலக சம்பளம் வழங்கும் அலுவலர்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்ட பிறகு கடன் தொகை அனுமதிக்கப்பட வேண்டும். பணியாளர்கள் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் சங்கத்தின் நிதிநிலைமையைக் கருத்திற் கொண்டு சம்பந்தப்பட்ட சாகத் துணைப்பதிவாளரிடம் தக்க துணை விதிக்கிருத்தங்கள் மேற்கொண்டு பதிவு செய்த பின்னரே புதிய உச்ச வரம்பின் அடிப்படையில் கடன் வழங்கப்பட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage