சென்னை: நடிகர் விமல் திருச்சி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரில் மிகப் பிரம்மாண்டமாக ஒரு பங்களா ஒன்றைக் கட்டி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் பல ஊர்களில் உள்ள சாலைகள் எல்லாம் பை பாஸ் ஆகிவிட்டன. ஆனால், விமல் ஊருக்குப் போகும் சாலை இருபுறம் குளிர்ச்சியாக நிழல் தரும் புளியமரங்களை வரிசையாகப் பார்க்க முடிகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பக்கம் உள்ள பன்னாங்கொம்பு தான் நடிகர் விமலின் சொந்த ஊர். இங்கேதான் விமலின் இரண்டு அடுக்கு கொண்ட பங்களா இருக்கிறது. இந்த ஊரிலேயே பெரிய வீடு என்றால் அது இவருடையதுதான். நடிகரான பிற்பாடு இதை விமல் கட்டி இருக்கிறார். இங்கே இப்போது அவரது உறவினர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
'வாகை சூடவா' இவரது நடிப்புக்கு ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. இவரும் சிவகார்த்திகேயனும் இணைந்து நடித்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' நல்ல கமர்சியல் ஹிட் கொடுத்தது. விஜய்யின் 'கில்லி' உள்ளிட்ட சில படங்களில் சின்ன ரோலில் நடித்த விமல், 'பசங்க' படத்தின் மூலம் முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமானார். அது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படமாக அமைந்தது.
விமலுக்கு சினிமா மீது எப்படி ஆர்வம் வந்தது? அவர் உறவினர்கள் இப்போது என்ன சொல்கிறார்கள்? அவரது உறவினர்கள் யார் இந்த ஊரில் வசிக்கிறார்கள்? இதைப் பற்றி எல்லாம் மக்கள் அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றனர். இந்தக் கிராமத்தில் விமலின் பெரியப்பா மகன் லக்ஷ்மி நாராயணன் வசித்து வருகிறார். அவர் தனது தம்பியின் வளர்ச்சி பற்றிப் பேசுகையில், "என்னுடன் பிறந்த தம்பி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் சுந்தர். அடுத்து என் சித்தப்பா பையன் விமல். மூன்று பேருமே கூட்டுக் குடும்பமாகத்தான் வாழ்ந்து வந்தோம். இப்போது விமல் மட்டும் சென்னையில் மனைவி மற்றும் பிள்ளைகளோடு இருக்கிறான்" என்கிறார்.
10 ஆம் வகுப்புதான் படித்தான். அதன் மேல் சினிமா ஆர்வத்தால் சென்னைக்கு வந்துவிட்டார். இவரது அப்பா அவருக்கு முன்பாகவே ஒப்பந்ததாரராக இருந்து வேலை பார்த்து வந்துள்ளார். லக்ஷ்மி நாராயணனும் சென்னையில் ஒப்பந்ததாரர் தான். குடும்ப தொழில் மீது விமலுக்கு ஆர்வம் இல்லை. சினிமா தான் குறி என இருந்துள்ளார். அவரை கலா மாஸ்டரிடம் டான்ஸ் கற்றுக் கொள்ள லக்ஷ்மி நாராயணன் தான் கொண்டு போய் சேர்த்துவிட்டுள்ளார்.
அதன்பின்னர் வெற்றி பெற்றது யாவும் விமலின் சொந்த முயற்சிதான். அவர் கூத்துப்பட்டறையில் இணைந்த பிறகே நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தத் தகல்களை அமேசிங் தமிழா என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
விமலின் அப்பா நாராயணசாமி நாயுடு நடத்திய உழவர் மற்றும் உழைப்பாளர் கட்சியில் தீவிரமாக ஈடுபாடு கொண்டு இயங்கி இருந்துள்ளார். அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மொத்த பகுதிக்கும் விமல் அப்பாதான் மாவட்டச் செயலாளர். பின்னர் பாக்யராஜ் கட்சி தொடங்கிய விமலின் பெரியப்பாவைக் கட்சிக்கு அழைத்துள்ளார். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.
இந்த முறை விமல் மனைவி டாக்டர் அக்ஷயாவுக்கு திமுக சார்பில் மணப்பாறை தொகுதியில் சீட்டுக் கேட்டுள்ளார். இறுதி நேரத்தில் வாய்ப்பு கூட்டணிக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டதால் கிடைக்கவில்லை என்பதை விமலின் அண்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த ஊரில் விமல் தாத்தா மிகச் செல்வாக்குடன் வாழ்த்துள்ளார். இப்போது விமல் பங்களா கட்டி இருக்கும் இடத்தில் முன்பு இவரது குடும்பத்திற்குச் சொந்தமான பள்ளிக்கூடம் இருந்துள்ளது. அதை இடித்து விட்டு புதிய பங்களா கட்டி இருக்கிறார். இவரது குடும்பமே 30 ஆண்டுகள் முன்பே அரசியல் செல்வாக்கு மிக்கதாக இருந்துள்ளது. ஒரு காலத்தில் விவசாயிகள் கட்சியிலிருந்த இவரது குடும்பம் இப்போது திமுகவில் இருக்கிறது.