கட்டுக்கடங்காம போய்கிட்டே இருக்கே! 1 லட்சம் டாலரை தாண்டிய 1 பிட்காயின் மதிப்பு! எதிர்காலமே இதுதான்?

post-img
சென்னை: பிட்காயின் மதிப்பு தற்போது 1 லட்சம் டாலரை தாண்டி உள்ளது. இதன் மதிப்பு நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது 106000 டாலர் என்ற நிலையை பிட்காயின் அடைந்துள்ளது. 90 ஆயிரத்தில் கடந்த சில நாட்களாக இருந்த நிலையில் தற்போது 1 லட்சம் டாலரை தாண்டி உள்ளது. தற்போதைய சந்தை நிலவரப்படி பிட்காயின் மதிப்பு தற்போது 1.06 லட்சம் டாலரை தொட்டுள்ளது. இதனுடைய மதிப்பு 89,92,568ரூபாய் ஆகும். அதாவது கிட்டத்தட்ட 90 லட்சம் ரூபாய். கடந்த சில வருடம் முன் இதன் மதிப்பு வெறும் 1000 டாலர் மட்டுமே இருந்தது. ஆனால் சில வருடங்களில் வருடத்தில் விஸ்வரூப வளர்ச்சி அடைந்து இருக்கிறது. இந்த ஒரு வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 50,000 டாலர் வரை இது உயர்ந்தது. இடையில் சில நாள் வீழ்ச்சியும் அடைந்தது. என்ன நடக்கிறது?: நவம்பர் 12 அன்று $90,000 என்ற நிலையை எட்டிய சில வாரங்களில் 1 லட்சத்தை தாண்டி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பிட்காயினுக்கு ஆதரவானர். அந்த நாட்டு அரசு தங்கள் ரிசர்வில் பிட்காயினை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.. எலான் மஸ்க்கிற்கு அரசாங்கத் திறன் துறை ("DOGE") தலைவர் பொறுப்பை வழங்கி உள்ளார். இதன் மூலம் அரசில் உள்ள பல நிர்வாகிகளை எலான் மஸ்க் விரைவில் நீக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் கையில் எடுத்த போது.. அதில் இருந்த பலர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மஸ்க் அரசு நிர்வாகத்திலும் பலரை நீக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரும் தீவிரமாக பிட்காயின் ஆதரவாளர் என்பதால் அதன் மதிப்பு அமெரிக்காவில் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. என்ன விதமான கரன்ஸி இது?: உலகில் நாம் பயன்படுத்தும் பணம் போலவே இணையத்திலும் நிறைய பணம் இருக்கிறது. இந்த பணத்தை நாம் நேரடியாக பயன்படுத்தாமல் இணையத்தில் மட்டுமே பயன்படுத்துவோம். 1500க்கும் அதிகமான இதுபோன்ற பணங்கள் உலகில் பயன்பாட்டில் இருக்கிறது. இதற்கு 'கிரிப்டோ கரன்சி' என்று பெயர். அவற்றில் ஒன்றுதான் இந்த பிட்காயின். இந்த பிட்காயினை நாம் பணம் கொடுத்தோ, பங்குகள் கொடுத்தோ வாங்கி கொள்ள முடியும். மேலும் தங்கத்திற்கு பதிலாகவும் இதை மாற்ற முடியும். இதற்கு வடிவம் இல்லை என்பதால் இதை வைத்து இணையத்தில் எளிதாக பொருட்கள் வாங்கலாம். மேலும் இதற்கு சரியான வரி விதிப்பு முறையோ, வங்கி கட்டுப்பாடோ இல்லை என்பதால் இதில் அதீத சுதந்திரம் இருக்கிறது. பிளாக் செயின்: பிளாக் செயின் தொழில்நுட்பத்தில்தான் கிரிப்டோகரன்சி செயல்படுகிறது . உலகிலேயே மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பம் ஆகும் இது. இணையத்தில் க்ரிப்டோகரன்சிகளுக்காக இருக்கும் லெட்ஜர் என்று இதை கூறலாம். எந்த வங்கியின் கட்டுப்பாட்டிலும் இல்லாத தனி தனி கரன்சிகள் ஆகும் இது. உலகம் முழுக்க கிரிப்டோ கரன்சி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Related Post