சாண்டா தாத்தா எந்த நாட்டை சேர்ந்தவர் தெரியுமா! நீங்க யோசிக்கும் நாடு இல்லை.. இது புதுசா இருக்கே

post-img
வாஷிங்டன்: கிறிஸ்துமஸ் என்றாலே இங்குப் பலருக்கும் நினைவுக்கு வருவது சாண்டா தாத்தா தான்.. இரவு நேரத்தில் வரும் சாண்டா தாத்தா குழந்தைகளுக்கு கிப்ட்களை அள்ளி கொடுத்துவிட்டுச் செல்வார் என்ற நம்பப்படுகிறது. இந்த சாண்டா தாத்தா எங்கள் நாட்டில் தான் இருக்கிறார் என்று பல்வேறு நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. ஆனால், இதற்கான பதில் உங்களை ஆச்சரியப்படுத்தும். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். டிசம்பர் மாதம் என்றே இங்குப் பலருக்கும் உற்சாகம் தான். ஏனென்றால் உலகிலேயே அதிகம் கொண்டாடப்படும் நிகழ்வான கிறிஸ்துமஸ் டிசம்பர் மாதம் தான் வருகிறது. மேலும், கிறிஸ்துமஸ் என்றாலே இங்குப் பலருக்கும் நினைவுக்கு வருவது சாண்டா தாத்தா தான். நள்ளிரவில் வீடுகளுக்கு வரும் சாண்டா தாத்தா, வீட்டிலுள்ள குழந்தைகளுக்குப் பரிசுகளை வழங்கி செல்வார் என்பதே நம்பிக்கை. அதாவது பறக்கும் மான்கள் பூட்டப்பட்ட வண்டியில் பறந்து வரும் சாண்டா தாத்தா, வீடுகளில் கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்குவார் என்று குழந்தைகளுக்குச் சொல்ல நாம் கேட்டு இருப்போம். சாண்டா தாத்தா இப்போது கற்பனை கதாபாத்திரம் என்றாலும் இது முன்பு ஒரு காலத்தில் இருந்த நபரை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டதாகவும். எனவே, அதன் அடிப்படையில் பார்க்கும் போது சாண்டா தாத்தா எந்த நாட்டை சேர்ந்தவராக இருப்பார்? இந்த கேள்வி கேட்டதும் நம்மில் பலருக்கும் பனி படர்ந்த நாடுகள் தான் நினைவுக்கு வரும். ஆனால், இதற்கான பதில் உங்களை ஆச்சரியப்படுத்தும். அது குறித்து நாம் பார்க்கலாம். சாண்டா கிளாஸ் தங்களை நாட்டை சேர்ந்தவர் எனப் பல நாடுகள் உரிமை கொண்டாடுகிறது. குறிப்பாகப் பின்லாந்து சுற்றுலாத் துறை லாப்லாந்தில் உள்ள கோர்வடுந்துரி என்ற பகுதியில் தான் சாண்டா கிப்ட்களை ரெடி செய்யும் ஃபேக்டரி இருப்பதாகச் சொல்கிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் சமயத்தில் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் அங்குச் செல்கிறார்கள். அதுவே மிகப் பெரிய வருவாயைப் பின்லாந்து சுற்றுலாத் துறைக்குக் கொடுக்கிறது. இதேபோக டென்மார்க்கும் தனது நாட்டிற்கு உட்பட கிரீன்லாந்து பகுதியில் தான் சாண்டா வசிப்பதாகக் கூறுகிறது. இதுபோக ஸ்வீடன் கூட தங்கள் நாட்டில் உள்ள மோரா என்ற பகுதியில் தான் வசிப்பதாகக் குறிப்பிடுகிறது. கனடா இதை எல்லாம் தாண்டிப் போய்விட்டது. கடந்த 2013ல் சாண்டா தங்கள் நாட்டுக் குடிமகன் என்று சொல்லும் வகையில் சாண்டாவுக்கும் அவரது மனைவிக்கும் பாஸ்போர்ட் கூட கொடுத்துவிட்டது. மேலும், இதற்கு இவர்கள் பல நாட்டுப்புறக் கதைகள் சொல்கிறார்கள். ஆனால், அதில் பெரும்பாலான கதைகள் ஹேப்பி சாண்டாவாக இல்லாமல் அச்சுறுத்தும் சாண்டாவுக்கான கதைகளாகவே இருக்கிறது. உதாரணத்திற்குப் பின்லாந்தை எடுத்துக் கொள்வோம். அங்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு நூத்திபுக்கி என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. ஜனவரி மாதம் உரோம ஆடைகளை அணிந்து கொண்டு ஆண்கள் சிலர் வீடுகளுக்குப் பரிசுகளைக் கேட்பார்களாம். பரிசுகளைத் தரவில்லை என்றால் அந்த வீடுகளைச் சபித்துவிட்டுச் செல்வார்களாம். இதே நடைமுறை தான் நாளடைவில் பரிசுகளைக் கொடுப்பதாக மாறியதாகக் கூறப்படுகிறது. இப்படி அச்சுறுத்தும் பல கதைகள் கிறிஸ்துமஸுக்காகச் சொல்லப்படுகிறது. நவீனக் காலங்களில் சாண்டா எப்போதும் பனி சூழ்ந்த ஒரு இடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, அதன் அடிப்படையில் பார்த்தால் இந்த நாடுகளில் எதாவது ஒரு நாடாகவே இருக்கும் என்றே பலரும் நினைப்பார்கள். ஆனால், உண்மையில் இதற்கான பதில் உங்களை வியக்க வைக்கும். சாண்டா என்பது பனி படர்ந்த நாட்டை சேர்ந்தவராக இல்லாமல் இருக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறது. ஆனால், அதுதான் உண்மை. சாண்டா கிளாஸ் என்பது சின்டர்கிளாஸ் அல்லது செயிண்ட் நிக்கோலஸ் என்ற பெயரில் இருந்து உருவானது. அது கிறிஸ்தவ பிஷப் செயின்ட் நிக்கோலஸ் என்பவருடன் தொடர்பைக் கொண்டுள்ளது. இவரது உடல் தற்போது துருக்கி அமைந்துள்ள ஸ்மிர்னா என்ற இடத்தில் புதைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே, சாண்டா அந்த பகுதியைச் சேர்ந்தவராகவே இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்

Related Post