சட்டீஸ்கர்: நவம்பர் 23-ம் தேதி ராஜஸ்தானில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக மனோரமா ஊடகம் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக நிலவும் மக்கள் எதிர்ப்பும், உட்கட்சிப் பூசலும் காங்கிரஸுக்குப் பலத்த இழப்பை ஏற்படுத்தும் என்று மனோரமா நியூஸ்-விஎம்ஆர் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
அசோக் கெலாட் அரசுக்கு எதிரான ஆட்சி எதிர்ப்பு அலையும், பாஜகவுக்கு ஆதரவான அலையும் காங்கிரஸை ஆட்சி இருந்து அகற்ற வழி ஏற்படுத்தும் என்று மனோரமா ஊடகம் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
எத்தனை இடங்கள்: 2018ல் 39.4 சதவீதமாக இருந்த காங்கிரஸின் வாக்கு சதவீதம் 37.4 சதவீதமாக குறையும் என இந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊசலாட்டம் காங்கிரஸின் இடங்களை தற்போதுள்ள 100ல் இருந்து 67-75 என்ற இடங்களுக்குள் கொண்டு வரலாம் என்றும் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 67-75 இடங்களை பெற்று காங்கிரஸ் தோல்வி அடையும் வாய்ப்புகள் உள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மறுபுறம், பாஜக வாக்குகள் கிட்டத்தட்ட 5 சதவீதம் (4.8%) அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2018 இல் 38.8 சதவீதத்திலிருந்து 43.6 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 110-118 இடங்களை பெற்று பாஜக வெற்றி பெறலாம். இப்போது பாஜகவிற்கு ராஜஸ்தானில் 73 இடங்கள் உள்ளன. அதில் இருந்து கூடுதலாக 40 இடங்கள் வரை பாஜக பெறலாம் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
200 பேர் கொண்ட சபையில் 101 இடங்கள் பெற்றால் தனிப் பெரும்பான்மை கிடைக்கும். இந்த நிலையில் 110-118 இடங்களை பெற்று பாஜக வெற்றி பெறலாம் என்று இந்திய கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சி மற்றும் சுயேட்சைகள் ஆகிய 'மற்றவர்கள்' தொடர்பாகவும் சர்வே எடுக்கப்பட்டு உள்ளது. 2018-ல் 21.9 சதவீதம் வாக்குகளை இவர்கள் பெற்றனர். இந்த நிலையில் இவர்களின் வாக்குகள் 19 சதவீதமாக இழக்க நேரிடும் என்றும் சர்வே கணித்துள்ளது. இந்த சிறிய கட்சிகள் இணைந்து ராஜஸ்தான் தேர்தலில் 20 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவில்லை என்றாலும் பல இடங்களில் வாக்குகளை பிரிக்கும் என்று கணிப்பில் தெரிவிக்கபப்ட்டு உள்ளது.
அனல் பறக்கும் சத்தீஸ்கர் மாநில தேர்தல்.. காங்கிரஸ் கட்சிக்கு செக்.. பாஜக வெளியிட்ட குற்றப்பத்திரிகை!
தேர்தல் தேதி: பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல் பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் - மே மாதம் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தற்போது 5 மாநில தேர்தல் முடிவுகள் அதற்கு வரப்போகும் டீசர் போல பார்க்கப்படுகிறது.
இதற்கான தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன,
அதில்,
மிசோரம் - நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடக்கும்
மத்திய பிரதேசம் - நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடக்கும்
ராஜஸ்தான் - நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடக்கும்
சத்தீஸ்கர் - நவம்பர் 7 மற்றும் 17 (2 கட்டமாக தேர்தல் நடக்கும்)
தெலங்கானா - நவம்பர் 30ம் தேதி தேர்தல் நடக்கும்
5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 3ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.