பல்லடத்தில் 1.5 கிமீ தொலைவில்.. முக்கிய குற்றவாளி

post-img

திருப்பூர்: மதுபோதையில் ஏற்பட்ட தகராறால் கொலை நடந்துள்ளது என்றும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 1.5கி.மீ. தொலைவில் குற்றவாளிகள் வசித்து வந்துள்ளனர் என்றும் முக்கிய குற்றவாளி தப்பி ஓட முயன்றதால் காலில் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் திருப்பூர் மாவட்ட எஸ்பி சாமிநாதன் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளக்கிணறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 49 வயதாகும் மோகன்ராஜ் , 46 வயதாகும் அவரது சகோதரர் செந்தில்குமார் , இவர்களின் தாயார் புஷ்பவதி (68), சித்தி ரத்தினாம்பாள் (59) ஆகியோர், கடந்த செப்டம்பர் 4-ம் தேதி இரவு மது போதை கும்பல் வெட்டிக் கொலை செய்தது.


இதுதொடர்பாக புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீஸார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி மேற்பார்வையில் தனிப்படை அமைத்து காவல்துறை குற்றவாளிகள் குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து தேடியது.


இந்த வழக்கில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து என்பவர் குண்டடம் அருகே அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் போலீசிடம், கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதத்தை தொட்டம்பட்டி குடிநீர் தொட்டி மேல் மறைத்து வைத்திருப்பதாக கூறினார்., அதை எடுத்து தருவதாகவும் கூறி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிமீது செல்லமுத்து ஏறினார்.


அவருடன் போலீசாரும் சென்றனர். அப்போது செல்லமுத்து, பின்னால் சென்ற போலீஸாரை தள்ளிவிட்டு, தொட்டியின் மேல் பகுதியில் இருந்து குதித்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார். இதில் தவறி விழுந்த செல்லமுத்துவின் கால் முறிந்துவிட்டது.இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு செல்லமுத்துவுக்கு மாவு கட்டுப்போடப்பட்டது. தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.


தமிழ்நாட்டையே அதிர வைத்த பல்லடம் கொலையாளிகள்.. சரண் அடைந்த முக்கிய குற்றவாளி.. அதிரடி திருப்பம்
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் வெங்கடேஷ் (அ) குட்டி, சோனைமுத்து, செல்லமுத்து, ஐயப்பன் ஆகியோர் தான் கொலையில் இடுபட்டது தெரியவந்தது,.
இந்நிலையில் பல்லடம் கொலை வழக்கு முக்கிய குற்றவாளியான திருநெல்வேலி மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (எ) செல்வம் (27) மற்றும் சோனமுத்தையா ஆகியோர் திருப்பூர் வடக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதேபோல் 4வது குற்றவாளியான ஐயப்பனும் கைது செய்யப்பட்டார்.


இந்நிலையில் பல்லடம் கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்து இன்று விளக்கம் அளித்தார். அப்போது எஸ்பி சாமிநாதன் கூறுகையில்,கடந்த செப்டம்பர் 3ம் தேதி அன்று பல்லடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கள்ளக்கிணறு பகுதியில் கொலை நடந்த வழக்கில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை தேடுவதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படைகள் செப்டம்பர் 4ம் தேதி ஒரு குற்றவாளியை கைது செய்தனர்.


 தமிழகத்தை குலைநடுங்க வைத்த பல்லடம் 4 பேர் படுகொலை- முக்கிய குற்றவாளிகளில் 4-வது கொலையாளி கைது
இதேபோல் அடுத்த மூன்று குற்றவாளிகளும் செப்டம்பர் 6ம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சம்பந்தமாக விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, வெகு விரைவில் தண்டனை வாங்கி கொடுக்க எல்லா வகையிலும் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.


அப்போது செய்தியாளர்கள் இந்த சம்பவம் எப்படி நடந்தது? இதற்கு காரணம் என்ன? கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலம் என்ன என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த எஸ்பி சாமிநாதன், இந்த கொலை சம்பவம் நடந்த கள்ளக்கிணறு பகுதியில் இருந்து 1.5 கிமீ தொலைவில் குற்றவாளிகள் வசித்து வந்துள்ளனர். குற்றவாளிகள் மது அருந்த வந்த போது, இரு தரப்புக்கும் வாய் தகராறு ஏற்படுகிறது.


அப்போது ஆத்திரம் அடைந்த குற்றவாளிகள், அவர்களை வெட்டியும் குத்தியும் தாக்கி கொன்றுள்ளனர். கொலைகளுக்கு மது போதையில் இருந்து ஒரு காரணம் என்றால், ஏற்கனவே முன்விரோதமும் இருந்துள்ளது. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.கஸ்டடியில் எடுத்து விசாரிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.


முக்கிய குற்றவாளி வெங்கடேஷ் தப்பி ஓட முயன்றதால், அவரை காலில் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது. போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது இந்த சம்பவம் நடந்தது. வெங்கடேஷை நேற்றே கைது செய்துவிட்டோம்.நேற்று காவல் நிலையத்தில் வந்த போது கைது செய்தோம். வெங்கடேஷ் மீது கொலை முயற்சி உள்பட ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது என்றார்.


பின்னணியில் ஏதேனும் அரசியல் கட்சியினர் உள்ளனரா என்ற கேள்விக்கு, அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று எஸ்பி திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த வழக்கில் 4 குற்றவாளிகள் இருந்தனர். வெங்கடேஷ் (அ) குட்டி, சோனைமுத்து, செல்லமுத்து, ஐயப்பன் உள்ளிட்ட 4 குற்றவாளிகளையும் கைது செய்துவிடோம் என்றார்.

 

Related Post