உலக கோப்பை கிரிக்கெட்டில் ட்விஸ்ட்! முக்கிய மேட்ச் மழையால் பாதிக்கும்!

post-img

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முக்கியமான ஒரு மேட்ச் மழையால் பாதிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கிறது. 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது.


முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது. அடுத்து ஆப்கானிஸ்தான் அதை தொடர்ந்து பாகிஸ்தான் கடைசியாக வங்கதேசம் என்று அடுத்தடுத்து வரிசையாக 4 போட்டிகளை இந்தியா வென்றது.


அதன்பின் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இந்திய வென்றுள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக நடந்தது. இதிலும் இந்திய அணி வென்றது. கடைசியாக இலங்கைக்கு எதிராக திரில்லாக சென்ற போட்டியிலும் இலங்கை அணியை எளிதாக வீழ்த்தி 300 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.


இதன் மூலம் 7 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றுள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத ஒரே அணி இந்திய அணிதான்.


தென்னாபிரிக்கா அணி அதிரடி; இன்னொரு பக்கம் 7 போட்டிகளில் ஆடிய தென்னாபிரிக்க அணி இதுவரை 6 போட்டிகளில் வென்றுள்ளது. கடைசியாக நேற்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் கூட தென்னாபிரிக்க அணி அதிரடியாக வென்றது. நெட் ரன் ரேட் +2.290என்று உச்சத்தில் உள்ள அந்த அணி இப்பத்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி, தென்னாபிரிக்கா அணி இரண்டும் தற்போது செமி பைனலுக்கு சென்றுள்ளது.


இந்த நிலையில் மீதம் உள்ள இரண்டு இடங்களுக்கு கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் இந்த இடங்களுக்கு கடுமையாக போட்டியிட்டு வருகின்றன.


தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்: இந்த நிலையில்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முக்கியமான ஒரு மேட்ச் மழையால் பாதிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதன்படி நவம்பர் 9 ஆம் தேதி பெங்களூரில் நியூசிலாந்து vs இலங்கை இடையிலான மேட்ச் மழையால் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


நியூசிலாந்து அணி: இன்னொரு பக்கம் நியூசிலாந்து அணி நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. மழை காரணமாக பாதிக்கப்பட்ட போட்டியில் டக்வஒர்த் லூயிஸ் முறைப்படி நியூசிலாந்து தோல்வி அடைந்தது.

 

முதலில் இறங்கிய நியூசிலாந்து 50 ஓவரில் 401/6 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய பாகிஸ்தான் 25.3 ஓவரில் 200/1 ரன்கள் எடுத்து வென்றது. அதற்கு முன் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. அதற்கு முன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வீழ்ந்தது.தொடக்கத்தில் நன்றாக ஆடிய நியூசிலாந்து தற்போது 4 தோல்விகளுடன் சரிந்து இறங்கு முகம் கண்டுள்ளது. முதல் 4 போட்டிகளில் வென்ற நியூசிலாந்து கடைசி 4 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி அடைந்துள்ளது. 90 சதவிகிதமாக இருந்த அவர்களின் செமி பைனல் வாய்ப்பு தற்போது 40 சதவிகிதமாக குறைந்துள்ளது.


இப்படிப்பட்ட நிலையில்தான் நவம்பர் 9 ஆம் தேதி பெங்களூரில் நியூசிலாந்து vs இலங்கை இடையிலான மேட்ச் மழையால் பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

 

Related Post