மாஸ்கோ: உக்ரைனின் செர்னோபில் அணுஉலைப் பேரிடர் பகுதிக்கு அருகில் வாழும் தெருநாய்கள் வேகமாக பரிணாம வளர்ச்சியடைந்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவர் மிக வேகமாக மரபணு மாறுபாடுகளை பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த மரபணு மாற்றம் பற்றி தெரிந்து கொள்ளும் முன் செர்னோபில் அணு உலை வெடிப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். 1986 ஏப்ரல் 26ம் தேதி செர்னோபில் அணு உலை வெடித்தது. உக்ரைன் ரஷ்யா இடையே இருக்கும் பிரிப்யாட் பகுதியில் இந்த செர்னோபில் அணு உலை வெடித்தது.அப்போது சோவியத் யூனியன் கீழே இரண்டு நாடுகளும் ஒன்றாக இருந்தது. அங்கு இருக்கும் ரியாக்டர் 4ல் அணு உலை வெடிப்பு ஏற்பட்டது.
RBMK ரியாக்டரான இதில் பாதுகாப்பு சோதனைக்காக மின்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அப்போது வெப்பநிலை அதிகரிப்பதை தடுப்பதற்காக கூலண்ட் பயன்படுத்தும் போது, அதில் சில தவறுகள் ஏற்பட்டு திடீரென வெப்பநிலை உச்சம் தொட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அணு உலை திடீரென வெடித்துச் சிதறியது. ரியாக்டர் கோர் மொத்தமாக வெடித்த நிலையில் செர்னோபில் முழுக்க அணு கதிர்வீச்சு பரவியது.
மூடப்பட்ட உலை: 5 லட்சம் பேர் இங்கு கஷ்டப்பட்டு செர்னோபில் உலையை மூடி அங்கு கதிர்வீச்சை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனாலும் முடியவில்லை. இதை தொடக்கத்தில் சில நாட்கள் சோவியத் யூனியன் மூடி மறைத்தது. ஆனால் பின்னர் மக்களுக்கு விஷயம் தெரிந்து அது மிகப்பெரிய பேரழிவிற்கு வழி வகுத்தது. சோவியத் யூனியன் பின்னர் உடைந்ததற்கும் கூட செர்னோபில் முக்கியமான ஒரு காரணமாக பார்க்கப்பட்டது. இந்த விபத்தில் நேரடியாக பலியானது என்னவோ சில நூறு பேர்கள் மட்டுமே.
ஆனால் மறைமுகமாக இங்கு ஏற்பட்ட கதிர்வீச்சு காரணமாக அங்கு பணியாற்றிய நபர்கள், அவர்களின் குழந்தைகள், உறவினர்கள், அந்த ஊர் பகுதியை சேர்ந்தவர்கள் என்று பலருக்கு கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. இதில் 90 ஆயிரம் பேர் வரை பலியானார்கள். ஆனால் இதெல்லாம் மறைமுக மரணங்கள். செர்னோபில் விபத்து உலக வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான அணு உலை வெடிப்பு ஆகும். இந்த நிலையில் சோவியத் யூனியன் உடைந்த பின் செர்னோபில் பகுதி உக்ரைன் வசம் சென்றது
மரபணு மாற்றம்: இப்படிப்பட்ட நிலையில் உக்ரைனின் செர்னோபில் அணுஉலைப் பேரிடர் பகுதிக்கு அருகில் வாழும் தெருநாய்கள் வேகமாக பரிணாம வளர்ச்சியடைந்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவர் மிக வேகமாக மரபணு மாறுபாடுகளை பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்கா, போலந்து மற்றும் உக்ரைன் ஆராய்ச்சியாளர்கள், செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து பல்வேறு தொலைவில் வாழும் 302 நாய்களின் டிஎன்ஏ மாதிரிகளை ஆய்வு செய்தனர். மார்ச் 2023 ஆய்வின் முடிவில், இந்த நாய்களுக்கும் உலகெங்கிலும் உள்ள பிற நாய் மக்களுக்கும் இடையே தனித்துவமான மரபணு வேறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த நாய்களில் 40% ஜீன்கள் வேறு மாதிரி உள்ளன. பொதுவாக நாய்கள் எந்த நாயுடனும் இணை சேரும். ஆனால் இந்த நாய்கள் அதை தவிர்த்து உள்ளன. இவை குழு குழுவாக வாழ தொடங்கி உள்ளன. அந்த குழுவிற்குள் மட்டுமே இணை சேர்ந்து உள்ளன.
மனிதர்களிடம் உள்ள இந்த இயல்பு அங்கே நாய்களிடம் வந்துள்ளது. அதோடு அதை சதைகள், எலும்புகள் ஆகியவையும் உருமாற்றம் அடைந்துள்ளன. மேலும் இவை யானைகள் போல குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் வாழும் பழக்கத்திற்கும் மாறி உள்ளன. எல்லா நாய்களும் அப்படி கிடையாது. ஆனால் செர்னோபில் நாய்கள் அப்படி உள்ளன. இதன் மரபணு மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்ததாக காணப்படுவதாக ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.