இந்தியாவில் Tesla தொழிற்சாலை நிச்சயம்..மோடி உடனான சந்திப்பில் எலான் மஸ்க் ..!

post-img

இந்த முக்கியமாக காலக்கட்டத்தில் பிரதமர் மோடியின் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளது மிகவும் முக்கியமானதாக, பல முக்கியமான முதலீடுகள் குறித்த அறிவிப்பு, ஆயுதம் ஒப்பந்தங்கள், சர்வதேச பாதுகாப்பு என பல முக்கிய அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் Tesla தொழிற்சாலை நிச்சயம்.. மோடி உடனான சந்திப்பில் எலான் மஸ்க் கொடுத்த வாக்குறுதி..!

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்-ஐ நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் எலான் மஸ்க் இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து பேசிய போது எவ்வளவு விரைவாக முதலீடு செய்ய முடியுமோ செய்யவோம் என தெரிவித்தார். இந்த சந்திப்பில் எலான் மஸ்க் இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி தளத்தை அமைக்கும் திட்டம் குறித்து பிரதமர் மோடிக்கு விளக்குவார் என ரெயூட்டர்ஸ் முன்பு அறிவித்திருந்தது.

இந்தியாவில் விரைவில் டெஸ்லா வரும் என்பதில் உறுதியாக உள்ளேன், இதை விரைவாக செய்து முடிக்கவும் முயற்சி செய்யப்படும் என செய்தியாளர்கள் சந்திப்பில் எலான் மஸ்க் பதில் அளித்தார். எலான் மஸ்க் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வர உள்ளார். சமீபத்தில் சீனாவுக்கு சென்ற எலான் மஸ்க் அரசு அதிகாரிகளை சந்தித்து முக்கியமான விஷயங்களை விவாதித்தார்.

இந்த சீன பயணத்தில் எலான் மஸ்க் மிகவும் அமைதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க் இந்தியாவுக்கு வருவது குறித்து பேசிய போது, பிரதமர் நரேந்திர மோடியின் ஒத்துழைப்புக்கு மிகவும் நன்றி, விரைவில் இந்தியா குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார். இதுமட்டும் அல்லாமல் தான் பிரதமர் மோடியின் ரசிகன் எனவும் எலான் மஸ்க் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உலகின் எந்த பெரிய நாட்டையும் விடவும் இந்தியாவில் அதிகப்படியான வாய்ப்புகள் குவிந்துள்ளது, பிரதமர் மோடி இந்தியாவைப் பற்றி உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளார். இந்தியாவில் முதலீட்டை ஈர்க்க கடுமையாக முயற்சி செய்கிறார் மோடி, நாங்களும் தயாராக உள்ளோம். ஆனால் சரியான நேரத்திற்காக காத்திருக்கிறோம் என தெரிவித்தார்.

மோடி - எலான் மஸ்க் சந்திப்பிற்கு நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பே அரசு அதிகாரிகளை டெஸ்லா அதிகாரிகள் சந்தித்தனர். எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா இந்தியாவில் நேரடி விற்பனையை துவங்க பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. இதற்காக வட்டி விகிதங்களை குறைக்க முயற்சியில் மத்திய அரசிடம் டெஸ்லா தோல்வி அடைந்துள்ளது.

இதற்கு மாறாக மத்திய அரசு டெஸ்லா-வை இந்தியாவில் தனது எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்கான தொழிற்சாலையை அமைக்க வலியுறுத்தும் வேளையில், டெஸ்லா சில பில்லியன் டாலர்கள் மதிப்பிலான உதிரிபாகங்களை மட்டுமே இந்தியாவில் தயாரிக்க தயாராக இருப்பதாக அறிவித்தது.

இதனால் இந்தியாவில் டெஸ்லா முதலீட்டு திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதேவேளையில் எலான் மஸ்க் தலைமை விகிக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்ராட்லிங்க சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் அடுத்தடுத்து தடைகளை எதிர்கொண்ட காரணத்தால் ஸ்பேஸ்எக்ஸ் இந்திய கிளையும் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Post