தமிழ்நாட்டில் உயரும் மின்சார கட்டணம்? யாருக்கெல்லாம் அதிகரிக்க வாய்ப்பு?

post-img

தமிழ்நாட்டில் மீண்டும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. கடந்த வருடம் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் இந்த வருடம் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக அடுத்தடுத்த வருடங்களில் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவது இதுவே முதல்முறை. ஜூலை 1ம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 Important points on Tamil Nadu government Electricity tariff hike

4.70 சதவிகிதம் அளவிற்கு மின் கட்டணம் உயரும். விலைவாசி உயர்வு, பணவீக்கம் காரணமாக இந்த கட்டண உயர்வு மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்வதாக செய்தி வெளியாகி உள்ள நிலையில் யாருக்கெல்லாம் மின்கட்டண மாற்றம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

1) 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். ஏழை மக்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று மின்சாரத்துறை வட்டாரத்தினர் குறிப்பிட்டு உள்ளார். மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகள் தமிழ்நாட்டில் உள்ளன.

2 ) இந்த கட்டண மாற்றம் காரணமாக 1 கோடி மக்களுக்கு எந்த பாதிப்பும் இதனால் இருக்காது. 42 விழுக்காடு மின் இணைப்புதாரர்களுக்கு எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பு இல்லை. 3) குடிசை இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் தொடரும். அதேபோல் குசை தொழில், கைத்தறி, வழிபாட்டு தளங்களுக்கான சலுகை கட்டணம் தொடரும்.

4) தற்போது நிலவரப்படி மக்கள் செலுத்தும் மின்சார கட்டணத்தில் 4.70 சதவிகிதம் வரை மின்சார கட்டணம் உயர்த்தப்படும். அதாவது 100 ரூபாய் செலுத்திய இடத்தில் 105 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும்.

5) தற்போது தமிழ்நாட்டில் பணவீக்க பாதிப்பு 4.7 சதவிகிதமாக உள்ளது. அதே பணவீக்கம் இங்கும் கட்டண உயர்வில் அமல்படுத்தப்படும்.

6) 100 யூனிட்டிற்கு மேல் செல்ல செல்ல மின்சார கட்டணம் அதிகம் உயரும் வாய்ப்புகள் உள்ளன. 700- 800 யூனிட் அல்லது அதற்கும் மேல் கூடுதல் மின்சார கட்டணம் அமலுக்கு வர வாய்ப்புகள் உள்ளன.

7) இந்த வருடம் மட்டுமின்றி அடுத்த 3 வருடங்களுக்கு பண வீக்கத்தை வைத்து மின்சார கட்டணம் உயரும் வாய்ப்புகள் உள்ளன.

8) ஒரு யூனிட்டிற்கு 21 பைசாவில் இவர்ந்து 51 பைசாவாக கட்டணம் உயரும் வாய்ப்புகள் உள்ளன. இது தனி வீடுகளுக்கு.

9) பொது அபார்ட்மெண்டில் உள்ள பொது கனெக்சன்களுக்கு 8 ரூபாயில் இருந்து 8.47 ரூபாய் அளவில் மின்சார கட்டணம் உயர்வு இருக்கலாம்.

10) அதேபோல் கிலோவாட் மின்சாரம் 200 ரூபாயில் இருந்து 208 ரூபாயாக உயரும்.

கடந்த ஆண்டு உயர்வு: கடந்த வருடம் ஜூலை மாதம் தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டது. 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 உயர்த்தப்பட்டது. 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 உயர்த்தப்பட்டது.


Related Post