சென்னை: தமிழ்நாட்ட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். அரசு ஒதுக்கீடு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2023 - 2024ஆம் ஆண்டில் இளநிலை மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளில் சேர 40,193 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்பிபிஎஸ் இடங்களும், 200 பிடிஎஸ் இடங்களும், 150 இஎஸ்ஐ இடங்களும் உள்ளன. இந்நிலையில், இந்தப் படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
நீட் மதிப்பெண்களின் அடிப்படையில், இட ஒதுக்கீட்டின் படி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீடு, நிர்வாக பிரிவு ஒதுக்கீடு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் முதலிடம் பிடித்துள்ளார். இவர் நீட் தேர்வில் 720 மதிப்பெண்கள் பெற்று இந்தியாவிலேயே முதலிடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த சூர்ய சித்தார்த், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வருண் ஆகியோர் தரவரிசை பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். டாப் 10 இடங்கள் பிடித்துள்ள மாணவர்கள் பட்டியலையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டு தரவரிசையில், சேலத்தை சேர்ந்த மாணவி கிருத்திகா முதலிடம் பிடித்துள்ளார். அவர் பெற்ற நீட் மதிப்பெண் 569 ஆகும். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பச்சையப்பன் 565 மதிப்பெண்கள் பெற்று இந்த தரவரிசை பட்டியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவர் முருகன் 560 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.
அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான முதல் சுற்று கலந்தாய்வை மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு ஜூலை 20ம் தேதி தொடங்குகிறது. இது தொடர்பாக மருத்துவக் கலந்தாய்வு குழு வெளியிட்ட அறிவிப்பில், சான்றிதழ் சரி செய்யும் பணிகள் ஆகஸ்ட் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான முதல் சுற்று கலந்தாய்வை மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு ஜூலை 20ம் தேதி தொடங்குகிறது. இது தொடர்பாக மருத்துவக் கலந்தாய்வு குழு வெளியிட்ட அறிவிப்பில், சான்றிதழ் சரி செய்யும் பணிகள் ஆகஸ்ட் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும்.