டெல்லி: அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதால் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களான ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் இன்று மாலை 5.30 மணிக்கு செய்தியாளர்களை அமித்ஷா சந்தித்து விளக்கம் தர இருக்கிறார்.