Year Ender: அமெரிக்காவை புரட்டி போட்ட "அந்த" ஒரு போட்டோ.. டிரம்ப் காதை உரசி சென்ற துப்பாக்கி குண்டு!

post-img
வாஷிங்டன்: இந்தாண்டு உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் டிரம்ப் பென்சில்வேனியாவில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்த போது மர்ம நபர் ஒருவர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். டிரம்ப் இதில் நூலிழையில் உயிர் தப்பிய நிலையில், தேர்தலில் கம்பேக் கொடுத்து வெல்லவும் இது ஒரு தொடக்கப் புள்ளியாக இருந்தது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். அமெரிக்காவில் எப்போதும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறும். அதன்படி இந்தாண்டு அங்கு அதிபர் தேர்தல் நடைபெற்றது. டிரம்ப்: இந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். குடியரசு கட்சி சார்பில் மாஜி அதிபர் டிரம்ப் போட்டியிட்ட நிலையில், தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை டிரம்ப் பெற்றார். இந்த அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வந்த போது கடந்த ஜூலை மாதம் டிரம்ப் மீது கொலை முயற்சி தாக்குதல் நடந்தது. உலகெங்கும் பேசுபொருளான அந்த சம்பவம் குறித்து நாம் பார்க்கலாம். அது ஜூன் மாதம் 13ம் தேதி.. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் டிரம்ப் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். மாலை நேரத்தில் டிரம்பின் பிரச்சாரத்தை மக்கள் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது டிரம்ப் சட்டவிரோத குடியேற்றம் அமெரிக்காவில் எவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது என்பது குறித்து விளக்கிப் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது தான் அந்த மோசமான சம்பவம் நடந்தது. என்ன நடந்தது: அதாவது பிரச்சாரம் முழுக்க மக்களைப் பார்த்தே பேசிக் கொண்டு இருந்த டிரம்ப், சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக ஒரு சார்ட்டை காண்பித்து விளக்கத் தலையை லேசாகத் திருப்பினார். சரியாக அந்த நேரம் பார்த்துத் தான் துப்பாக்கிச் சூடு நடந்தது. அவர் சரியான நேரத்தில் தலையைத் திருப்பியதால் துப்பாக்கிக் குண்டு அவரது காதை மட்டும் உரசிச் சென்றது. சரியான நேரத்தில் டிரம்ப் தனது தலையைத் திருப்பியதே அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது. டிரம்பை கொலை செய்ய முயன்ற நபர் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்று அடையாளம் காணப்பட்டது. 20 வயதே ஆன அவர் ரைபிள் வகை துப்பாக்கியைப் பயன்படுத்தி டிரம்ப் கொல்ல முயன்றுள்ளார். பென்சில்வேனியாவில் உள்ள விதிகளின்படி கைத்துப்பாக்கி வாங்கக் குறைந்தபட்சம் 21 வயதாகி இருக்க வேண்டும். மேலும், உள்ளூர் போலீசாஸ் அனுமதி தேவை. ஆனால், இந்த ரைபிள் வகை துப்பாக்கி வைத்திருக்க 18 வயது அடைந்தாலே போதும். போலீஸ் அனுமதி தேவையில்லை. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அங்குத் துப்பாக்கி வைத்திருக்கும் விதிகள் குறித்தும் விவாதத்தைக் கிளப்பியது. தாமஸ் மேத்யூ: தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் பல முறை துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். அதில் முதல் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் டிரம்பின் காதில் காயம் ஏற்பட்டது. அடுத்தடுத்து சில குண்டுகள் பாய்ந்த நிலையில், டிரம்ப் பேச்சைக் கேட்கத் திரண்டிருந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஆறு பேர் காயமடைந்தனர். அதற்குள் துரிதமாகச் செயல்பட்ட பாதுகாப்புப் படையினர் தாமஸ் மேத்யூவை சுட்டுக் கொன்றனர். மேலும், டிரம்ப்பையும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அதேநேரம் இந்த துப்பாக்கிச் சூட்டை முன்கூட்டியே தடுக்க தவறியதற்காக செக்யூரிட்டி சர்வீஸ் மீது கடும் விமர்சனங்களும் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டிரம்ப் சில நாட்களிலேயே பிரச்சார களத்திற்குத் திரும்பினார். மேலும், டிரம்பின் பிரச்சாரத்திற்கும் இது பெரியளவில் உதவியது. குறிப்பாக ரத்தம் சொட்டச் சொட்ட டிரம்ப் இருக்கும் போட்டோ அமெரிக்க மக்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post