புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் வெடித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் டென்ஷனான ராமதாஸ், "என் பேச்சை கேட்கவில்லை என்றால் கட்சியில் இருக்க முடியாது" என்று அன்புமணியை எச்சரித்துள்ளார்.
பாமக மாநில இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் என்பவரை நிறுவனர் ராமதாஸ் தேர்வு செய்திருந்தார். இது குறித்த அறிவிப்பை இன்று புதுவையில் நடந்த புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அவர் அறிவித்தார். ஆனால் அதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது வார்த்தை போராக வெடித்தது. ஒரு கட்டத்தில், "நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் கட்சியில் இருக்க முடியாது" என்று ராமதாஸ் எச்சரித்துவிட்டார். இதற்கு பதிலடியாக சென்னை பனையூரில் வேறு ஒரு அலுவலகம் செயல்படும் என்றும், தன்னை அங்கு வந்து தொர்பு கொள்ளலாம் எனவும் அன்புமணி கூறியுள்ளார்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.