பெங்களூர் தமிழ் புத்தக திருவிழா இன்றே கடைசி நாள்.. மாணவர்களுக்கு பரிசு கூப்பன்.. மிஸ் பண்ணாதீங்க

post-img
பெங்களூர்: கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பெங்களூரில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. இந்த புத்த திருவிழாவின் இன்று கடைசி நாளாகும். இரவு 8 மணி வரை மக்கள் சென்று விருப்பமான புத்தகங்களை வாங்கி செல்லாம். இன்றைய விழாவில் சிறப்பு விருந்தினராக பெங்களூர் குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம் பிரசாத் மனோகர் பங்கேற்கிறார். கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பெங்களூரில் புத்தக திருவிழா நடத்தப்பபட்டு வருகிறது. அதன்படி 3ம் தமிழ் புத்தக திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 20ம் தேதி இந்த புத்தக திருவிழா தொடங்கியது. இன்று கடைசி நாளாகும் இன்று காலை 10 மணிக்கு புத்தக திருவிழா தொடங்கி விட்டது. இன்று இரவு 8 மணி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், கன்னடம் மொழிகளில் புத்தகங்கள் இங்கு கிடைக்கின்றன. பெங்களூர் குயின்ஸ் ரோட்டில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் பில்டிங்கிற்கு எதிரே The Institution of Engineers கட்டிட வளாகத்தில் புத்தக திருவிழா நடைபெறுகிறது. டூவீலர், நான்கு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி உள்ளது. கடைசி நாளான இன்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. அதன்படி இன்று மாலை 3.30 மணிக்கு ‛நம்ம ஊர் தமிழ் மக்கள் குழு' வழங்கும் நாட்டுப்புற நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாலை 5.00 மணிக்கு நிறைவு விழா மற்றும் கர்நாடகத் தமிழ் விருது-2024 வழங்கும் விழா நடைபெற உள்ளது. கர்நாடகத்தில் தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டு செய்த சான்றோர்களுக்கு சிறப்பு செய்யப்பட உள்ளது. சிறப்பு விருந்தினராக பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைவரான டாக்டர் வி.ராம் பிரசாத் மனோகர் ஐ.ஏ.எஸ். பங்கேற்கிறார். இந்த விழாவில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புத்தக கூப்பன்கள் அன்பளிப்பாக வழங்கப்படுகின்றன. எல்கேஜி முதல் எம்பிபிஎஸ் வரை எந்த மாணவராக இருந்தாலும் இந்த புத்தக கூப்பன்களை பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு கூப்பனும் 100 ரூபாய் மதிப்பு கொண்டது. இந்த கூப்பன் மூலம் வாங்கும் புத்தகத்துக்கு ரூ.100 தள்ளுபடி கிடைக்கும். ஒருவேளை புத்தக விலையே ரூ.100க்கு உள்ளே என்றால் புத்தகத்தை நீங்கள் இலவசமாக எடுத்துச் செல்லலாம். மொத்தம் ரூ.3 ஆயிரம் கூப்பன்கள் இதுபோல தரப்பட்டுள்ளன. ஆக மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள கூப்பன்களை பெங்களூர் நகர குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மானோகர் சொந்த பணத்தில் வழங்கி உள்ளார். இந்த கூப்பன் சீட்டுகளில், "புத்தகத்தை வாசியுங்கள்! உங்கள் வெற்றிக்கு வழிகாட்ட சகோதரனாக காத்திருக்கிறேன்" என்ற வாசகம் ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ் படத்துடன் இடம்பெற்றுள்ளது. அதிகாரியை தொடர்புகொள்ள mano4india@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post