டிரம்ப் அமெரிக்க அதிபர் ஆனதும்.. எச் 1 பி விசாவில் மாற்றமா? இந்தியர்களுக்கு ஆபத்தா? என்ன நடக்கிறது?

post-img
நியூயார்க்: அமெரிக்காவில் மற்ற நாட்டினர் குடியேறுவதை அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் டிரம்ப் கடுமையாக எதிர்த்து வருகிறார். ஆனாலும்.. சட்டபூர்வமாக மக்கள் குடியேறுவதை அவர் ஆதரித்தே வந்துள்ளார். அந்த வகையில் எலான் மஸ்க் கூட அமெரிக்காவில் குடியேறியவர்தான். டிரம்ப் ஆதரிக்கும் விவேக் ராமசாமியும் அதேபோல்தான். அவர் இந்தியர்! இப்போது டிரம்ப் வந்தால் எச்1 பி விசா இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விவேக் ராமசாமி, மஸ்க் போன்றவர்கள் இந்த விசாவை ஆதரிக்கிறார்கள். அதாவது திறமையானவர்களுக்கு, தகுதியானவர்களுக்கு இந்த விசா வழங்கப்படும். இந்த விசாவை அதிபர் டிரம்ப் இதுவரை ஆதரித்தே வந்துள்ளார். இனி அவர் நேரடியாக இதை ஆதரிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆட்சியில் அதாவது பிடனுக்கு முந்தைய டிரம்ப் ஆட்சியில் நிறைய கட்டுப்பாடுகளை எச் 1 பி விசா உட்பட பல விசா மீது டிரம்ப் விதித்து இருந்தார். அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட்ட H-1B பெத்தவர்களின் எண்ணிக்கை 2018 நிதியாண்டில் 570,368 இல் இருந்து 2019 நிதியாண்டில் 601,594 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், 2020 நிதியாண்டில் எண்ணிக்கை 368,440 ஆகக் குறைந்துள்ளது. 2021 நிதியாண்டில் H-1B நிலையில் சேர்க்கை 148,603 ஆகக் குறைந்தது. கொரோனா காரணமாக இந்த எண்ணிக்கை குறைந்தது. 2022ல் 4.10 லட்சமாகவும், 2023ல் 7.55 லட்சமாகவும் அதிகரித்தது. 2023 நிதியாண்டில் அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களில் 72.3% இந்தியர்கள் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. H-1B போன்ற குடியேற்றம் அல்லாத மற்ற வேலை விசாவைப் பெறுபவர்களுக்கு டிரம்ப் விதித்த கட்டுப்பாடுகள் மார்ச் 2021 இல் காலாவதியாகிவிட்டன, மேலும் ஜோ பிடன் நிர்வாகத்தால் அந்த கடுமையான விசா புதுப்பிக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் டிரம்ப் வந்தால் எச் 1 பி விசா உள்ளவர்களுக்கு மட்டுமே எளிமையான அனுமதியை தருவார்.. மற்ற விசா விண்ணப்பம் செய்பவர்களுக்கு கடுமையான விதிகளை கொண்டு வருவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. எச் 1 பி விசா திறமையானவர்களுக்கு, தகுதியானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதால் அதை பெறுவது கடினம். எனவே அதில் கட்டுப்பாடுகளை விதிக்காமல் மற்ற வேலை விசாக்களில் கட்டுப்பாடுகளை கொண்டு வர டிரம்ப் முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது. இதனால் எச் 1 பி விசா பெற முயலும் இந்தியர்களுக்கு சிக்கல் இல்லை ஆனால் மற்ற வேலை விசாக்கள் பெறுபவர்களுக்கு சிக்கல் என்று கூறப்படுகிறது. இந்தியர்கள் அச்சம்: அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் பலரும் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி காரணமாக அச்சத்தில் உள்ளார்களாம். அரசியல் ரீதியாக அமெரிக்காவில் குடிமகன் என்ற உரிமை பெற்ற இந்தியர்கள் பலரும் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர்கள்தான். ஆனால் இன்னும் அங்கே குடியுரிமை பெறாத இந்தியர்கள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி காரணமாக அச்சத்தில் உள்ளனர். டிரம்ப் என்ன மாதிரியான விதி முறைகளை கொண்டு வருவார்.. விசாவில் என்ன மாதிரியான மாற்றங்களை செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் பின் வரும் அம்சங்கள் இந்தியர்களிடையே நிலவி வருகிறதாம். அமெரிக்காவில் விசா விதிகள் மாற்றப்பட்டால் புதிதாக அமெரிக்கா சென்ற இந்தியர்கள் பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இந்தியர்கள் பலர் முறைகேடாக அமெரிக்கா சென்றுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட.. வெளியேற்றப்பட வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக அதிபர் டிரம்ப் "ஸ்கில்" அடிப்படையில் விசா வழங்கும் மாற்றங்களை கொண்டு வர வாய்ப்புள்ளது. இதனால் குறைந்த ஸ்கில் பணிகளை செய்ய அமெரிக்கா சென்ற இந்தியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதேபோல் அங்கே படிக்க சென்று.. அப்படியே வேலையில் சேர்ந்தவர்கள் தங்கள் நிறுவன எச். ஆர்களிடம் கதற தொடங்கி உள்ளனராம். அதன்படி எங்களுக்கு விசா உள்ளிட்ட விவகாரங்களில் நிறுவனங்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனராம். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post