பீகாரில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய பிரசாந்த் கிஷோர்.. விஸ்வரூபமான வினாத்தாள் கசிவு

post-img
பாட்னா: பீகாரில் 70-வது பிபிஎஸ்சி (Bihar Public Service Commission) முதல்நிலைத் தேர்வு கடந்த மாதம் நடந்தது. இதில், வினாத்தாள் கசிவு, தேர்வு அறைகளில் சிசிடிவி கேமராக்கள் இயங்காதது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாகவும், எனவே நடந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என்று இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக ஜன் சுராஜ் கட்சி தலைவரும், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார். பீகாரில் 70-வது பிபிஎஸ்சி (Bihar Public Service Commission) முதல்நிலைத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி நடந்தது. இந்ததேர்வின் போது வினாத்தாள் கசிவு, தேர்வு அறைகளில் சிசிடிவி கேமராக்கள் இயங்காதது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதன் காணமாக, எனவே நடந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என்று கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை முதல்வர் நிதிஷ் குமார் வீட்டுக்குள் நுழைய முயற்சித்த மாணவர்கள் மீது போலீஸார் தண்ணீர் பீச்சி அடித்து, தடியடி நடத்தி விரட்டினார்கள். இதனிடையே வினாத்தாள் கசிந்தாக கூறப்படும் குற்றச்சாட்டை பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மறுத்ததுடன், 10,000க்கும் மேற்பட்ட விண்ணப்பத்தாரர்களுக்கு மறு தேர்வுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் பிபிஎஸ்சி தேர்வுகளால் பாதிக்கப்பட்ட பல தேர்வர்கள் கடந்த இரண்டு வாரங்களாக பாட்னாவில் போராட்டம் நடத்தி வருகிறாரகள். இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவ வர அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். ஆனாலும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்களின் பிரதிநிதிகள் பீகார் மாநில அரசு தலைமைச் செயலாளர் அம்ரித் லால் மீனாவை திங்கள்கிழமை சந்தித்து பேசிய சில மணி நேரத்தில் பேசிய பிரசாந்த் கிஷோர், டிசம்பர் 13 அன்று நடந்த ஒருங்கிணைந்த தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தில் முதல்வர் நிதிஷ் குமார் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த 48 மணிநேரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்துவேன்' என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் போராட்டம் நடந்து வரும் இடத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கு பாட்னா காந்தி மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். போராட்டம் நடந்து வரும் நிலையில், அனுமதியின்றி கூடியதாக போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்த பிரசாந்த் கிஷோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரசாத் கிஷோர் செய்தியாளர்களிடம் பேசுகையில் "கடந்த 16 நாட்களில் மாணவர்களை நேரில் சந்திக்க முதல்வர் நிதீஷ் குமார் மறுத்துவிட்டார். இந்த அரசு அனைத்து முனைகளிலும் மாணவர்களை ஏமாற்றியுள்ளது. தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள்கூட இந்த மாணவர்களுக்கு முதலமைச்சரிடம் பேசி நிவாரணம் பெற முடியாதவர்களாக இருக்கிறார்கள். மாணவர்கள் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தப் பிரச்னை தீரும்வரை நான் இந்த மாணவர்களுடன் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்" என்று கூறினார். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிரசாந்த் கிஷோர் இரவு 11 மணி அளவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், " அரசு நிர்வாகம் நேரத்தை வீணடிக்கிறது. முன்பும் என் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தனர், என் மீது நடவடிக்கை எடுக்க விரும்பினால், ஏற்கனவே எடுத்திருக்க வேண்டும்... விவசாயிகளை போராட அனுமதித்தது யார்? டெல்லியில் யாராவது போராட்டம் நடத்தலாம் என்றால், பாட்னா காந்தி மைதானத்தில் நாங்கள் ஏன் போராட்டம் நடத்தக்கூடாது... அமைதியாக போராட்டம் நடத்திய மாணவர்களை அதிகாரிகள் தாக்கினார்கள்..." என்று கூறினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post