இந்தியாவிற்கும் பரவிய சீனாவின் HMPV வைரஸ்.. பெங்களூரில் பதிவான முதல் கேஸ்.. 8 மாத குழந்தை பாதிப்பு

post-img
பெங்களூர்: சீனாவில் HMPV வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது இந்தியாவிலும் இந்த கேஸ் பதிவாகி உள்ளது. பெங்களூரில் முதல் HMPV கேஸ் பதிவாகி உள்ளது. 8 மாத குழந்தை ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த குழந்தை மற்றும் குடும்பத்தினர் சமீபத்தில் எங்கும் வெளிநாடு பயணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் மக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் கொரோனா போன்ற வைரஸ் வந்துவிட்டது.. நிலைமை மோசமாக போகிறது என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் போஸ்டுகள் வர தொடங்கி உள்ளன. HMPV வைரஸ் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காட்சிகள் தீவிரமாக பரவி வருகின்றன. HMPV வைரஸ் என்பது human metapneumovirus என்பதை சுருக்கம் ஆகும்.. அதாவது மனித மெட்டாப்நிமோவைரஸ். இதுவும் கொரோனா போலவே.. மூச்சுக்குழலை பாதிக்கும் ஒரு வகையான வைரஸ் ஆகும். அதாவது இதுவும் மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் வைரஸ் ஆகும். சீனாவின் வடக்கு பகுதிகளில் இது அதிகம் பரவுகிறது. முக்கியமாக இளம் வயது.. அதாவது 14 வயதுக்கு குறைவான வயது கொண்டவர்களை அதிகமாக HMPV வைரஸ் தாக்குகிறது. சீன அதிகாரிகளும், உலக சுகாதார மையமும் பயப்படும் அளவிற்கு இது பெரிய பிரச்சனை இல்லை.. இதை பார்த்து கொரோனா போல அச்சப்பட வேண்டாம். இது சாதாரண மழைக்கால, குளிர் காலத்தில் ஏற்படும் பாதிப்பு போன்றதுதான் HMPV என்று சீன அதிகாரிகள், உலக சுகாதார மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். HMPV காரணமாக இப்போது தொற்று அதிகம் ஏற்பட்டு உள்ளது. சீனாவில் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். என்றாலும் கூட இது ஒரு புதிய வைரஸ் அல்லது உடனடி தொற்று அச்சுறுத்தல் அல்ல. பருவகாலத்தில் ஏற்படும் நோய் பாதிப்பு போன்றதுதான். இது சாதாரண கிளைமேட் காய்ச்சல் போன்றதுதான் என்று சீனா மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது பலருக்கும் சந்தேகம் எழலாம். அதன்படி HMPV பரவுவதால் மாஸ்க் அணிய வேண்டுமா? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். அதற்கு முதலில் HMPV வைரஸ் எப்படி பரவுகிறது என்று பார்க்க வேண்டும். சீனாவில் HMPV வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது இந்தியாவிலும் இந்த கேஸ் பதிவாகி உள்ளது. பெங்களூரில் முதல் HMPV கேஸ் பதிவாகி உள்ளது. 8 மாத குழந்தை ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த குழந்தை மற்றும் குடும்பத்தினர் சமீபத்தில் எங்கும் வெளிநாடு பயணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் இளைஞர்கள் இடையே முக்கியமாக சிறுவயதை சேர்ந்தவர்கள் இடையே இது அதிகம் ஏற்படுகிறது. கொரோனா எப்படி பூமர் வைரஸ் என்று அழைக்கப்பட்டது.. அப்படி இது ஜென் ஆல்பா வைரஸ் என்று அழைக்கும் வகையில்.. வயது குறைவானவர்களை இந்த வைரஸ் அதிகம் பாதித்து வருகிறது. பெரும்பாலான குழந்தைகள் சில நாட்களில் குணமடைவார்கள், இருப்பினும் கடுமையான நோய்களுக்கு மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருக்கலாம். அந்த வகையில் இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்பும் குழந்தைக்கு ஏற்பட்டு உள்ளது. அந்த குழந்தையின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post