கலவர நோக்கம்.. அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்றியதற்கு இதுதான் காரணம் - அப்பாவு

post-img
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் தனது உரையை வாசிக்க மறுத்துவிட்டு பாதியில் புறப்பட்டுவிட்டார். மறுபுறம் அதிமுக எம்எல்ஏக்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதற்கு விளக்கமளித்த அப்பாவு, "கலவர நோக்கத்துடன் அதிமுகவினர் செயல்பட்ட காரணத்தால் வெளியேற்ற உத்தரவிட்டேன்" என்று கூறியுள்ளார். அவர் பேசியதாவது, "ஆளுநர் உரையுடன் இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக அலுவலகம் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு நாளை இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன் பின்னர் நாளை சபை ஒத்திவைக்கப்படும். ஜன.8ம் தேதி தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறும். இறுதி நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம் ஏன்?: சட்டசபையில் அதிமுகவினர் கைகளில் பதாகையோடு வந்திருந்தனர். அண்ணா‌ பல்கலைக்கழக விவகாரத்தில் நீதி வேண்டும் என்று முழக்கமிட்டிருந்தனர். ஒருவேளை பல்கலைக்கழக வேந்தர் என்கிற முறையில் ஆளுநருக்கு எதிராக முழுக்கமிட்டார்களோ என்னவோ. நானோ, முதலமைச்சரோ பேசும்போது அதிமுகவினர் எந்த முழுக்கமும் எழுப்பவில்லை. மாறாக ஆளுநர் பேசும்போது மட்டுமே முழக்கங்களை எழுப்பினர். ஆளுநர் உரைக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தோடு, கலவர எண்ணத்தில் அவர்கள் முழக்கங்களை எழுப்பி இருந்ததால்தான் அவர்களை வெளியேற்றி இருந்தோம். ஆளுநர் உரை: இந்திய அரசியலமைப்பு சட்டம் 176 பிரிவு ஒன்றின்படி ஆளுநர் சட்டமன்றத்தில் உரையாற்ற வேண்டும். ஆளுநர் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி இருக்க வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா, ஆந்திரா, ஒடிசா என பல மாநிலங்களின் சில பகுதியை உள்ளடக்கி மதராஸ் மாகாணமாக இருந்த பொழுதே 1920ல் இங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. முதல் சட்டமன்ற கூட்டம் 1921ல் நடந்தது. அப்போது தொடங்கி இப்போது வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்தப்படும் மரபின் அடிப்படையில்தான் இன்றும் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அப்போது முதல் இப்போது வரை எந்த ஆளுநரும் இது போன்ற பிரச்சினையை ஏற்படுத்தியதில்லை. கடந்த 1995இல் அப்போதைய ஆளுநராக இருந்த சென்னா ரெட்டியை மாற்ற வேண்டும் என்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டிருந்தார். அந்த தீர்மானத்தை ஆளுநர் வாசித்து இருந்தார். அதன் பிறகு தான் 1996ல் ஆளுநர் உரை நடந்தது. அப்போது ஆளுநர் ஜனநாயக கடமை ஆற்றி விட்டுதான் சென்றார். ஆளுநர் உரை நடைபெறும் அந்த நாள் சட்டமன்ற கூட்டத் தொடரின் நாளாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. பத்திரிகையாளர்களாகிய நீங்கள்தான் ஆளுநர் ஏன் இப்படி நடந்துக்கொண்டார் என்பது குறித்து கேட்க வேண்டும்" என்று சபாநாயகர் அப்போது செய்தியாளர்களிடம் கூறினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post