ஆட்சியை விட்டு போகும் முன்.. கடைசியாக இந்தியாவிற்கு அதிபர் பிடன் அனுப்பிய ஆள்.. ரெடியான அஜித் தோவல்

post-img
நியூயார்க்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க உள்ள நிலையில்.. அதிபராக உள்ள பிடன் சார்பாக அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். அவரின் இந்த பயணம் பிடன் அரசு சார்பாக அனுப்பப்படும் கடைசி அரசு முறை பயணம் ஆகும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்க உள்ள நிலையில்.. தனது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களை அறிவித்து வருகிறார். அமெரிக்காவில் இந்தியா, யு.கே போன்ற ஆட்சி முறை கிடையாது. இதனால் அமைச்சர் பதவி என்ற பெயரில் பொறுப்புகள் வழங்கப்படாது. மாறாக அதே மத்திய அமைச்சரின் அதே பொறுப்புகளோடு அதிகாரத்தோடு செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் அதிபர் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு.. செனட் தரும் அடையாள ஒப்புதலுடன் செயலாளர்கள் ஆவார்கள். வெளியேறவுத்துறை அமைச்சர்: அமெரிக்காவில் மிக முக்கிய அமைச்சரவை பொறுப்பான வெளியுறவுத்துறை செயலாளர் பதவிக்கு டிரம்ப் தனக்கு நெருக்கமான செனட்டர் மார்கோ ரூபியோவை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமியை கொண்டு வர டிரம்ப் இருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் விவேக் ராமசாமியை புறக்கணித்து, செனட்டர் மார்கோ ரூபியோவை தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்சிக்கு.. வெளியுறவுத்துறை செயலாளராக தேர்வு செய்ய டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டிரம்பின் 2024 பிரச்சாரத்தின் போது அதில் முக்கிய பங்கு வகித்தவர் ரூபியோ. இவரின் தேர்வு பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. எல்லைகள் பாதுகாப்பு: தாமஸ் டி. ஹோமனை நாட்டின் எல்லைகள் கடல் மற்றும் வான்வெளி எல்லை பாதுகாப்புக்கு பொறுப்பான border czar துறைக்கு தலைவராக நியமிக்க உள்ளார். அதாவது அமெரிக்காவில் அத்துமீறி.. அனுமதியின்றி குடியேறி உள்ளவர்களை வெளியேற்றுவதற்க்கும்.. புதிதாக மக்கள் ஊடுருவதை தடுக்கவும் தாமஸ் டி. ஹோமனை டிரம்ப் உள்ளே கொண்டு உள்ளார். ரம்ப்பின் முந்தைய நிர்வாகத்தில் மூத்த குடியேற்ற அதிகாரியான தாமஸ் டி. ஹோமன் பதவி வகித்து வந்தார். அப்போது இந்த பணியை சிறப்பாக செய்தார். அதோடு அகதிகள் குடியேற்றத்தை வெகுவாக கட்டுப்படுத்தினர். இவர் டிரம்பிற்கு மிக நெருக்கம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. இந்த தேர்தலில் அகதிகள் விவகாரம் உச்சத்தில் இருந்தது. அமெரிக்காவில் வெளிநாட்டினர் முறைகேடாக குடியேறுவதை டிரம்ப் கடுமையாக எதிர்த்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ்: டிரம்ப் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றுமாறு மைக் வால்ட்ஸை அழைத்துள்ளார் என்கிறார்கள். இவர் முன்னாள் ராணுவவீரர் . கடுமையான சீன எதிர்ப்பாளர். சீனாவை கடுமையாக விமர்சனம் செய்ய கூடியவர் . ரஷ்யாவை உக்ரைன் இடையிலான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் எதிர்பார்க்கும் நிலையில் இவரின் வருகை கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் நியமிக்கப்பட்டு உள்ள நிலையில்.. அந்நாட்டின் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் இவர் சந்திப்பு நடத்த உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையில் முக்கியமான பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைகள் நடக்க உள்ளன. இரண்டு நாட்டு உறவு, பாதுகாப்பு, இந்தியாவின் எல்லை பிரச்சனைகள், தாலிபானின் திடீர் எழுச்சி , தாலிபான் - பாகிஸ்தான் மோதல் என்று பல விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட உள்ளன. ஆனால் இதை பொதுவாக புதிய அதிபருக்கு கீழ் வரும் பாதுகாப்பு ஆலோசகர்தான் செய்ய வேண்டும். ஆனால் இங்கே பிடனின் அமைச்சரவையில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செய்வது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின் வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post