2026 தேர்தலில் வெற்றி யாருக்கு? தீர்மானிக்க போகும் இளம் வாக்காளர்கள்.. லிஸ்டில் இந்த டேட்டா பாருங்க

post-img
சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வாக்காளர் இறுதி பட்டியலில் 18 - 29 வயதிலான வாக்காளர்கள் 1.19 கோடி பேர் உள்ளனர். கட்சியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்க போகும் வாக்காளர்களாக இளம் வாக்காளர்கள் இருக்க போகிறார்கள். எனவே வரும் 2026-சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் எந்த கட்சிக்கும் இளைஞர்களின் வாக்குகளை கவரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது இதில் இளைஞர் பட்டாளத்தை பெருமளவு ரசிகர்களாக கொண்டு இருக்கும் விஜய்யின் அரசியல் எண்ட்ரி களத்தில் போட்டியை கடுமையாக்கும் என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்தாக உள்ளது. திமுக ஒருபக்கம் வலுவான கூட்டணியாக நின்றாலும் எதிர்க்கட்சிகளின் வரிசையில், அதிமுக, தவெக, பாஜக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி என பட்டியல் நீள்கிறது. எனவே இளையவர்களை குறிவைத்து வேலைவாய்ப்பு, அரசுப்பணி, தொழில், கடனுதவி, திருமண நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளிப்பதில் கட்சிகள் ஆர்வம் காட்டும் எனத்தெரிகிறது. அதிக வாக்காளர்கள் தொகுதி தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 3.11 கோடியும், பெண்கள் 3.24 கோடியும் உள்ளனர். இந்த பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். தமிழகத்திலேயே அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. அங்கு ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 45 ஆயிரத்து 184, பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து 45 ஆயிரத்து 645, மூன்றாம் பாலினத்தவர்கள் 129 பேர் என மொத்தம் 6 லட்சத்து 90 ஆயிரத்து 958 வாக்காளர்கள் உள்ளன. குறைந்த வாக்காளர்கள் தொகுதி குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இருக்கும் தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. அங்கு ஆண்கள் 86 ஆயிரத்து 456, பெண்கள் 90 ஆயிரத்து 45, மூன்றாம் பாலினத்தவர்கள் 4 என மொத்தம் 1 லட்சத்து 76 ஆயிரத்து 505 வாக்காளர்கள் உள்ளனர். 1.19 கோடி இளம் வாக்காளர்கள் தமிழ்நாடு வாக்காளர் இறுதி பட்டியலில் 18 - 29 வயதிலான வாக்காளர்கள் 1.19 கோடி பேர் உள்ளனர். கட்சியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்க போகும் வாக்காளர்களாக இளம் வாக்காளர்கள் இருக்க போகிறார்கள். எனவே வரும் 2026-சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் எந்த கட்சிக்கும் இளைஞர்களின் வாக்குகளை கவரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதிலும் வரும் சட்டமன்ற தேர்தல் களம் இதுவரை இருந்ததை போல அல்லாமல் முற்றிலும் வேறுபட்டு இருக்க போகிறது. ஏனெனில் பல முனை போட்டி, கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு என அரசியல் வட்டாரத்தில் தற்போதே யூகங்கள் கொடி கட்டி பறக்கின்றன. திமுக - அதிமுக - பாஜக - தவெக - சீமான் இளைஞர் பட்டாளத்தை பெருமளவு ரசிகர்களாக கொண்டு இருக்கும் விஜய்யின் அரசியல் எண்ட்ரி களத்தில் போட்டியை கடுமையாக்கும் என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்தாக உள்ளது. திமுக ஒருபக்கம் வலுவான கூட்டணியாக நின்றாலும் எதிர்க்கட்சிகளின் வரிசையில், அதிமுக, தவெக, பாஜக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி என பட்டியல் நீள்கிறது. இளம் வாக்காளர்களை கவரும் விதமாக வேட்பாளர்களை கொண்ட கட்சிக்கு கணிசமான வாக்குகள் பெறும் வாய்ப்புள்ளது. எனவே, இளைஞர்களை கவரும் விதமாக பல்வேறு திட்டங்களையும் வாக்குறுதிளையும் அரசியல் கட்சிகள் அள்ளி தெளிக்க வாய்ப்புள்ளது. இளைஞர்கள் கையில் முடிவு அதேபோல தேர்தல் பிரசாரங்களையும் இளைஞர்களை கவரும் விதமாக சமூக ஊடகங்களில் அதிகம் செய்வது என்பது போன்ற இளைஞர்களை ரீச் செய்யும் யுக்தியை அரசியல் கட்சிகள் கையில் எடுக்க வாய்ப்புள்ளன. மொத்தத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அதிகாரம் யாருக்கு செல்லப்போகிறது என்பதை தீர்மானிக்க இருக்கும் முக்கிய துருப்பு சீட்டுக்களாக இளம் வாக்காளர்களே இருக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே இளையவர்களை குறிவைத்து வேலைவாய்ப்பு, அரசுப்பணி, தொழில், கடனுதவி, திருமண நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளிப்பதில் கட்சிகள் ஆர்வம் காட்டும் எனத்தெரிகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post