பாலியல் இச்சையை தாய், மகளுடன் தீர்த்து கொள்ள கூறினாராம் பெரியார்! சீமான் கருத்தால் வெடித்த சர்ச்சை

post-img
கடலூர்: பாலியல் இச்சையை தாய், மகளுடன் தீர்த்து கொள்ளலாம் என்று கூறியவர் பெரியார். தமிழ் தாய்க்கு என்ன கொம்பா இருக்கு? என்று கேள்வி கேட்டவர் பெரியார்'' என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தந்தை பெரியார் பற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் சர்ச்சையாக பேசியுள்ளார். கடலூரில் இன்று சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ, அவர்களுடன் உறவு வைத்து கொண்டு சந்தோஷமாக இரு என்று கூறியது பெண்ணிய உரிமையா?. மதுவுக்கு எதிராக 1000 தென்னை மரங்களை வெட்டினார். அவரை பகுத்தறிவுவாதி என்று தானே சொல்கிறீர்கள். என் தோப்பில் கள் இறக்க அனுமதியில்லை என்று சொல்வது தான் அறிவு உள்ளவரின் செயல். மரத்தை வெட்டி சாய்த்தது பகுத்தறிவா? உலகில் எந்த நாட்டில் மது இல்லை. மது குடிக்க வேண்டாம் என்பது கட்டிய மனைவியுடன் படுக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். சமூக நீதிக்கும் பெரியாருக்கும் சம்பந்தம் இருக்கா? சமூக நீதிக்கும் ஆனைமுத்துவுக்கும் சம்பந்தம் இருக்கா? சமூகநீதியை போராடி பெற்றுக்கொடுத்தது பெரியாரா? ஆனை முத்துவா?'' என்று கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய இந்த கருத்துக்கு திராவிடர் கழகம், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சீமான் தனது பேச்சை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்று கூறியுள்ளனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post