கடும் நெருக்கடி.. பணிந்த ஜஸ்டின் ட்ரூடோ! கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு

post-img
ஒட்டாவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சொந்த கட்சியில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியதால் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக உள்ளார். அந்த நாட்டில் வரும் அக்டோபரில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், ஜஸ்டின் ட்ரூடோவிற்கு கடும் எதிர்ப்புகள் உள்ளன. அவரது கட்சியில் இருந்தே எதிர்ப்பு உள்ளது. இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவராக இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது. அதற்கு இந்தியா மறுத்து கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இதனால், இந்தியா - கனடா உறவில் தூதரக ரீதியாக விரிசல் ஏற்பட்டது. ட்ரூடோ இந்த விவகாரத்தை கையாண்டதற்கும் எதிர்ப்புகள் கிளம்பின. இத்தகைய சூழலில், கனடா பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ துறந்துள்ளார். அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அவர் தொடர்ந்து பதவியில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post