மூணு ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு, மனவளர்ச்சி குன்றிய சென்னை மாணவியை பலரால் சீரழிக்க செய்த அரக்கோணம் தோழி

post-img
சென்னை: மனவளர்ச்சி குன்றிய மாணவியை ரூ.3 ஆயிரம் பணத்திற்கு ஆசைப்பட்டு, பாலியல் ஆப் மூலம் சக கல்லூரி மாணவர்கள் மற்றும் ரயில் பயண நண்பர்களுக்கெல்லாம் விருந்தாக்கிய அரக்கோணம் தோழியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த பெண் போலீசுக்கு அளித்த வாக்குமூலம்தான் பலருக்கும் பகீரை கிளப்பி விட்டுள்ளது. சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்த, 21 வயது மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவி, கல்லூரி ஒன்றில் 3ம் வருடம் படித்து வருகிறார். அவருடன் பயிலும் சக மாணவியின் நண்பர், நந்தனம் கல்லுாரி மாணவர் சுரேஷ் உட்பட 3 பேரும், மன வளர்ச்சி குன்றிய மாணவியுடன் பழக்கமாகியிருக்கிறார்கள். சுரேஷ் உட்பட மூவரும், மாணவியின் மனரீதியான பலவீனத்தை பயன்படுத்தி, காதல் வலையில் வீழ்த்தியுள்ளனர். ஆட்டோ: பாதிக்கப்பட்ட மாணவி தினமும் ஆட்டோவில் தான் காலேஜூக்கு போவாராம்.. கல்லுாரிக்குள் நுழையும்போதே, "வெளியே போகலாம்" என்று மாணவியை கல்லூரி மாணவனும், பள்ளி மாணவனும் அதே ஆட்டோவில் அழைத்து சென்று விடுவார்களாம். வால்டாக்ஸ் சாலை மற்றும் பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு அம்மாணவியை அழைத்துச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதேபோல், மொபைல் போன் செயலி வாயிலாக பழக்கமான சிலரும், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து, நந்தனம் கல்லூரி மாணவன் சுரேஷ் (20), பள்ளி மாணவன் நரேஷ் (19) கல்லூரி மாணவன் மணி (எ) சுப்பிரமணி உள்பட 7 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 மாணவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். ஆண் நண்பர்கள்: பாதிக்கப்பட்ட மாணவியுடன் ஒன்றாக படித்து வரும் அரக்கோணத்தை சேர்ந்த தோழியான சந்தியா, தன்னுடைய ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து, தெரிந்தே தவறான பழக்கத்திற்கு உடந்தையாக இருந்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாகவே, அப்பரிதாப பெண்ணுக்கு பாலியல் தொல்லை தரப்படுகிறது என்று தெரிந்துதான், ஆண் நண்பர்களுக்கு கடைசிவரை துணையாக இருந்து உதவி வந்துள்ளார் தோழி சந்தியா. இந்த மாணவி கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில், தற்போது பிடிபட்டுள்ளார்.. அரக்கோணம் அருகே சொந்தக்காரர்கள் வீடுகளில் மாறி மாறி தலைமறைவாக இருந்து வந்த சந்தியாவை, தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு போலீசார் கைது செய்து, எழும்பூர் மகளிர் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மாணவி சந்தியா: அப்போது மாணவி சந்தியா அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: "அரக்கோணம் பகுதியை சேர்ந்த சந்தியா, சென்னை அண்ணா சாலையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் 40 விழுக்காடு மன வளர்ச்சி குன்றிய மாணவியுடன் நல்ல நட்பில் இருந்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி எப்போதும் ஆட்டோவில் தான் கல்லூரிக்கு வருவார். சந்தியா எதை சொன்னாலும் அவர் செய்வார். இதனால் சந்தியா சில நேரங்களில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு, தன்னுடைய வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வந்து தருவார். அப்போது தான் சந்தியா, ரயில் பயணம் மூலம் அறிமுகமான சுரேஷ் என்பவரை பாதிக்கப்பட்ட மாணவிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு சாக்லேட் என்றால் ரொம்ப பிடிக்குமாம். இதை வைத்தே அந்த பெண்ணை சாதகமாக பயன்படுத்தி கொள்ள முடிவு செய்தார். லாட்ஜ்: முதல் நாளே, காஸ்ட்லி சாக்லேட் அப்பெண்ணுக்கு வாங்கி கொடுத்துள்ளார். தன்னுடைய ஊரை சேர்ந்த நண்பன், 12ம் வகுப்பு மாணவனை அழைத்து கொண்டு, பாதிக்கப்பட்ட மாணவியை பெரியமேடு பகுதியில் உள்ள லாட்ஜிக்கு அழைத்து சென்று தவறாக நடந்துள்ளார். மாணவிக்கு மன வளர்ச்சி சரியாக இல்லாததால், ஒன்றாக இருந்தது அவருக்கு தவறாக தெரியவில்லை. அதனை தொடர்ந்து சுரேஷ் மூலம் அவரது சக நண்பர்களான கல்லூரி மாணவர்கள் மாணவியை தவறாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த கொடுமைக்கெல்லாம் சந்தியாவும் முழு ஒத்துழைப்பு தந்துள்ளார்.. அதற்காக பாதிக்கப்பட்ட மாணவியை சந்தியா தன்னுடைய செல்போன் எண் உதவியுடன் "ஸ்னாப்" என்ற பாலியல் ஆப்பில் போட்டோவுடன் பதிவு செய்துள்ளார். திருப்பூர்: இதன்மூலம் திருப்பூரை சேர்ந்த கவி, கோயம்பேடு பகுதியை சேர்ந்த ரோஷன், கார்த்திக், அம்பத்தூரை சேர்நத் பாண்டி, திருத்தணியை சேர்ந்த மணி ஆகியோரிடம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை பணம் பெற்றுள்ளார். அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 4 மாணவர்கள் பாதிக்கப்பட்ட மாணவியை அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளனர். அதற்காக ஒவ்வொரு மாணவர்களிடமும் தலா ரூ.3 ஆயிரம் வரை பணம் பெற்று வந்திருக்கிறார் சந்தியா. அப்படி அழைத்து செல்லும் மாணவர்கள் அவர்களுக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் அந்த நண்பர்களும் மூலம் பழக்கமான நபர்கள் என பலர் அந்த பாதிக்கப்பட்ட மாணவியை சீரழித்துள்ளனர். இதனால் சந்தியா பாதிக்கப்பட்ட மாணவிக்கு முழு பாலியல் புரோக்கராகவே செயல்பட்டு வந்ததுள்ளார். சந்தியாவுக்கு செயலி மூலம் கிடைக்கும் பணத்தில் சிறு தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு தாராளமாக செலவு செய்து தன் வசப்படுத்தி வந்திருக்கிறார். போலீஸ் புகார்: ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட மாணவியை மாணவர்களே, சந்தியாவுக்கு தெரியாமல் அழைத்து சென்று வந்துள்ளனர். அப்படி அழைத்துச்சென்றபோது தான் மாணவிக்கு உடல்நிலை மோசமாகியிருக்கிறது.. இதன்பிறகே, அவரது அப்பாவுக்கு விவரம் தெரிந்து போலீசில் புகார் தரப்பட்டது" என்று போலீசார் தெரிவித்தனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post