சென்னை ஐடி ஊழியர்களுக்கு செம செய்தி.. பெருங்குடி முதல் துரைப்பாக்கம் வரை.. நடக்கும் அசாத்திய மாற்றம்

post-img
சென்னை: பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. வேளச்சேரி - தாம்பரம் சாலை சந்திப்பில் உள்ள காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் இருந்து இந்த உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. பெருங்குடி- துரைப்பாக்கம் சாலை முழுக்க புதிய ஹை ரைஸ் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. 8 முக்கியமான அறிவிப்புகள் இந்த சாலையில் கொண்டு வரப்பட உள்ளன. இதன் காரணமாக இங்கே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அங்கே ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதமாக காமாட்சி மருத்துவமனை ஜே.என்.என் முதல் சென்னை ஒன் ஆபிஸ் பார்க் இடையே இந்த உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது ஏற்கனவே சென்னை பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக செல்லும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் பிற பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். குறிப்பாக கோவிலம்பாக்கம் மற்றும் ஈச்சங்காடு இடையே உள்ள 3 கிமீ தூரம் வழியாக பயணிக்கும் போது கடுமையான நெருக்கடியை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அதற்குக் காரணம் இங்கே தெரு விளக்கு இல்லை. இரண்டு பக்கமும் லாரிகள் வரிசையாக நிற்கும். இரவில் இங்கே செல்கையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக அந்த சாலையில் தற்போது பாலம் அமைக்கப்பட உள்ளது. புதிய ஐடி பார்க்: சென்னை பெருங்குடியில் புதிய ஐடி பார்க் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையில் ஏற்கனவே ஐடி பூங்காக்கள் உள்ள நிலையில் புதிய ஐடி பார்க் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதனால் அங்கே வரும் நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். அதன்படி பெருங்குடி சுங்கச்சாவடி அருகே பிரமாண்ட தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டப்பட உள்ளது. இது அமைக்க முன்வந்துள்ள சத்வா குழுமம் தனது திட்டத்தை சமீபத்தில் திருத்தியுள்ளது. தற்போது 21 தளங்கள் கொண்ட 4 கோபுரங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2 டவருக்கு பதில் 4 டவர் அமைக்கப்படும். அதன் பரப்பளவு முன்பு 3.81 லட்சம் சதுர மீட்டரில் இருந்து 5.24 லட்சம் சதுர மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய உயர் கட்டிடங்கள்: பெருங்குடி- துரைப்பாக்கம் சாலை முழுக்க புதிய ஹை ரைஸ் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. சென்னையின் ரியல் எஸ்டேட் ஹாட்ஸ்பாட்டாக இந்த சாலை மாற உள்ளது. பல உயரமான கட்டிடங்களை இந்த சாலை பெற உள்ளன. 1. WTC குடியிருப்பு வளாகம் (2x 26F & 10F மேரியட்) 2. DLF டவுன்டவுன் (30F+ அலுவலக கோபுரத்துடன் 6.8 மில்லியன் சதுர அடி அலுவலகம்) 3. அப்பாசாமியின் அல்டெஸா (2x 20F மற்றும் 1x 40F குடியிருப்பு கோபுரங்கள்) 4. சத்வா IT பூங்கா (4 x 20F) 6. ஃபோரம் ஒன்று OMR (1.7 மில்லியன் சதுர அடி மால்: சென்னையில் மிகப்பெரியது) 7. பாஷ்யம் டவுன்ஷிப் (6x 33F + ஹைப்பர் மார்க்கெட்) 6. அப்பாசாமியின் விங்ஃபீல்ட் (14F பிரீமியம் சொகுசு கோபுரம்) 7. எலிவேட் 21 (21F சொகுசு குடியிருப்பு கோபுரம்) 8. ஒலிம்பியா பினாக்கிள் (10F உடன் பணிபுரியும் அலுவலக கோபுரம்) Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post