சென்னை காவல்துறையில் 244 சிறப்பு எஸ்ஐகளுக்கு எஸ்.ஐயாக பதவி உயர்வு.. போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு!

post-img
சென்னை: தமிழக காவல் துறையில், இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து, 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு, எஸ்.ஐயாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சிறப்பு எஸ்.ஐகள் 244 பேர் எஸ்.ஐகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக காவல்துறையில் 2 ஆம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 25 ஆண்டுகள் நிறைவு செய்தவர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு தமிழக அரசு உத்தரவுப்படி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை ெபருநகர காவல்துறையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி, பெருநகர காவல்துறையில் பணியாற்றி வரும் 244 சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு பெருநகர தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரட்கர் வழிகாட்டுதலின்படி கடந்த 4.11.2024 ஆம் தேதி முதல் 9 வாரங்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இவர்களில் 125 சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு (85 ஆண்கள், 40 பெண்கள்) புதுப்பேட்டையில் உள்ள பெருநகர காவல் மேற்கு மண்டலத்தில் பணியிடை பயிற்சி மையத்தில் 119 சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு (68 ஆண்டுகள், 51 பெண்கள்) பரங்கிமலையில் உள்ள கிழக்கு மண்டல பயிற்சி மையத்தில் என மொத்தம் 244 சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு உதவி ஆய்வாளர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. அந்த பயிற்சியின் போது, 244 உதவி ஆய்வாளர்களுக்கு கவாத்து, சட்டம் வகுப்பு திறன் பயிற்சிகள், துப்பாக்கி கையாளுதல், துப்பாக்கி சுடுதல், யோகா, விளையாட்டு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதையடுத்து எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த பயிற்சி நிறைவு விழாவில் ஆயுதப்படை துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் பெருநகர மேற்கு மண்டல துணை கமிஷனர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டனர். பரங்கிமலை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்திக் குமார் மற்றும் ஆயுதப்படை துணை கமிஷனர் அன்வர்பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர். புதிதாக பதவி உயர்வு பெற்ற 244 உதவி ஆய்வாளர்கள் அந்தந்த உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி 3 மாதங்கள் காவல் நிலைய நடைமுறை பயிற்சிக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டன." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post