ரயிலில் ரிசர்வேஷன் செய்றீங்களா? டிக்கெட் புக்கிங் அலர்ட்.. புதிய ரயில்வே அட்டவணை.. மாறுகிறது எல்லாம்

post-img
சென்னை: இன்று ஜனவரி 1, 2025 முதல், ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பான புதிய விதிகளை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியிருக்கிறது.. இந்த புதிய ரயில் அட்டவணையானது அமலுக்கும் வந்துள்ளது. ரயில்வே அட்டவணையில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் என்னென்ன? வருடந்தோறும், புத்தாண்டில் ரயில் சேவை தொடர்பான புதிய தகவல்கள், மாற்றங்கள் குறித்த ரயில் அட்டவணை வெளியிடுவது வழக்கமாகும். ஒவ்வொரு வருடமும் இந்திய ரயில்வே அச்சிட்டு வெளியிடும் இந்த ரயில் அட்டவணையில், ரயில்களின் வழித்தட வரைபடம், ரயில் நிலையம் மற்றும் ரயில்களின் எண்கள், ரயில்களின் பெயர், பயண நேரம் போன்றவை இடம்பெறும். சிறப்பு தகவல்கள்: அத்துடன், ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் தொடர்பாக விவரங்கள், தட்கல், டிக்கெட் கட்டணம் திரும்ப பெறும் முறைகள், ரயில் பயண சலுகைகள், சிறப்பு பயண திட்டங்கள் போன்றவையும் இடம்பெற்றிருக்கும். இந்த தகவல்கள் அனைத்துமே, ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகுந்த உதவியாக இருந்து வருகின்றன. அந்த வகையில் 2025ம் ஆண்டிற்கான புதிய ரயில் அட்டவணையை இந்திய ரயில்வே தற்போது வெளியிட்டுள்ளது. Trains at a Glance (TAG)' என்ற பெயரில் வெளியிடப்படும் இந்த கால அட்டவணையின் 44வது பதிப்பு புத்தாண்டு முதல் அமலுக்கு வருகிறது. ரயில்வே துறை: அதன்படி, 2025ம் ஆண்டில், ரயில்வே துறை நமோ பாரத் விரைவு ரயில் (வந்தே மெட்ரோ), இரண்டு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 136 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களைத் தொடங்கும். பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 70 புதிய சேவைகளும், 64 வந்தே பாரத் ரயில்களும் புத்தாண்டில் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல, தெற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பிலும் அட்டவணைகள் வெளியாகியிருக்கின்றன. இந்த புதிய ரயில் அட்டவணை அமலுக்கும் வந்துள்ளது.. அந்த அட்டவணையில் பயன்பாட்டிலுள்ள 19 ரயில்களின் சேவைகள் நீட்டிக்கப்பட்டு, புதிதாக 10 ரயில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. .. 5 ரயில்களின் பயண எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 144 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ்: 45 எக்ஸ்பிரஸ் ரயில்களை பல்வேறு ரயில் நிலையங்களில் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 44 எக்ஸ்பிரஸ் ரயில்களில் நிரந்தரமாக 58 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. 28 எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏற்கனவே இருந்த பெட்டிகளுக்கு பதிலாக 343 லிங்கே ஹாஃப்மன் புஸ்ச் (LHB) ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.. 62 எக்ஸ்பிரஸ் ரயில்களில் 102 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 16 ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரே ஒரு ரயிலுக்கு மட்டும் வார பயண நாட்களின் எண்ணிகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் - நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் (20627-20628), மார்ச்.12-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட மைசூர் - சென்னை சென்ட்ரல் - மைசூர் வந்தே பாரத் ரயில் (20663-20664) உள்பட 8 புதிய ரயில்கள் அறிமுகம் இடம்பெற்றுள்ளன. புதிய எண்கள்: சென்னை சென்ட்ரல் - மைசூர் விரைவு ரயிலின் எண் (12609) மாற்றப்பட்டு புதிய எண் (16551) வழங்கப்பட்டுள்ளது. மைசூர் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயிலின் எண் (12610) மாற்றப்பட்டு, புதிய எண் (16552) வழங்கப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post