அரசு டாஸ்மாக் கடைகளுக்கு லீவு? நெருங்கும் பொங்கல் பண்டிகை.. தமிழகத்தில் களை கட்ட போகும் மது விற்பனை?

post-img
சென்னை: பொங்கல் பண்டிகை விரைவில் வர உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளில் அதிக விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் டாஸ்மாக் கடைகளுக்கு இந்த ஜனவரி மாதம் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. தமிழகத்தில் சுமார் 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவைகளிலிருந்து ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருடம் முழுவதும் அரசுக்கு கிடைத்து வருகிறது. அதற்கேற்றவாறு, தினமும் 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை தினங்களில் அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாகின்றன. அதிலும் சிறப்பு நாட்களில் டாஸ்மாக் வருமானம் டபுள் மடங்காக பெருகிவிடுகிறது.. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் டாஸ்மாக் வருமானம் 3 மடங்காக பெருகிவிடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. கடந்த தீபாவளிக்கும் 600 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக தகவல்கள் பரபரக்கவும் அரசியல் கட்சிகள் கொந்தளித்தன. கண்டனங்கள்: தீபாவளிக்கு முன்னும் - பின்னும் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், இதேபோல், 1,500 மனமகிழ் மன்றங்களின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் காட்டமாக கூறியிருந்தார். "தீபாவளியை மையமாக வைத்து சரவெடிக்கு மீதான தடையை நீக்க வேண்டும். தீபாவளி பண்டிகையை குடிகார பண்டிகையாக மாற்றிவிட்டனர்" என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றஞ்சாட்டியிருந்தார். பொங்கல் பண்டிகை: இந்நிலையில் பொங்கல் பண்டிகை வரப்போகிறது. தீபாவளியை போலவே பொங்கல் பண்டிகை என்றாலே டாஸ்மாக்குகள் களை கட்டும். அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் விற்பனை அமோகமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவர் தினம் வருகின்றது. எனவே, அன்றைய நாளில் வழக்கமாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.. அதேபோல, வரும் ஜனவரி 26ம் தேதி இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுவதால், அன்றைய தினமும் டாஸ்மாக் கடைகள் இயங்காது. இதுபோன்ற விடுமுறைகளை கணக்கில் கொண்டு, மது பிரியர்கள் முன்கூட்டியே பொங்கல் தினத்தில் அதிகப்படியான மதுக்களை வாங்கி குவித்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை டாப்: கடந்த வருடம் பொங்கல் பண்டிகையில், தமிழகத்தில் ரூ.673 கோடிக்கு மது விற்பனை நடந்திருப்பதாக தகவல் வெளியானது.. அதிலும் மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக 3 நாட்களில் ரூ.140.60 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாகவும், மதுரைக்கு அடுத்தபடியாக சென்னை மண்டலம் ரூ.136.93 கோடி, திருச்சி மண்டலம் ரூ.135.40கோடி, சேலம் மண்டலம் 131.10 கோடி, கோவை மண்டலம் 128.68 கோடிக்கு மது விற்பனை நடந்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது நினைவுகூரத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post