மனைவி பர்தா போடவில்லை என.. விவாகரத்து கேட்ட கணவன்! நீதிமன்றம் காட்டமான உத்தரவு.. தீர்ப்புதான் ஹைலைட்

post-img
சென்னை: இந்தியா முழுக்க இப்போது விவாகரத்து வழக்குகள் கவனம் பெற்று வரும் நிலையில் அலஹாபாத் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றின் விசாரணை மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. நீதிபதிகள் இதில் விதித்த உத்தரவு மக்கள் இடையே விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பர்தா அணியவில்லை என்பதற்காக லகப்பத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியிடம் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தார். பொதுவாக விவாகரத்திற்கு காரணம் சொல்ல வேண்டும். அதற்கு தொல்லை, மன ரீதியான கொடுமை, உடல் ரீதியாக கொடுமை, வேறு ஒருவருடன் உறவு வைத்து இருப்பது, வரதட்சணை என்று பல காரணங்கள் சொல்லப்படலாம். இதில் பலரும் மன ரீதியான கொடுமையை காரணமாக கூறுவார்கள். அதாவது கணவன் அல்லது மனைவியின் செயல் மன அழுத்தத்தை எனக்கு கொடுத்தது. மன ரீதியாக எனக்கு கொடுமைகளை செய்தது என்று கூறுவார்கள். இதை காரணமாக காட்டி பலர் விவாகரத்து வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். அந்த வகையில்தான் அந்த அலகாபாத்தை சேர்ந்த நபர் மனைவி 'பர்தா' (முக்காடு) அணியாமல் இருந்ததால் விவாகரத்து கேட்டார். இதை மன ரீதியிலான கொடுமை என்று கூறி வழக்கு தொடுத்தார். இதை எல்லாம் மனக் கொடுமையின் அடிப்படையில் சேர்க்க முடியாது.. இது எல்லாம் விவாகரத்து பெறுவதற்கு தகுதியுடையதாக இருக்காது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. இந்த வழக்கில் கணவரின் வாதத்தை ஏற்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீதிபதிகள் சௌமித்ரா தயாள் சிங் மற்றும் டோனாடி ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. பர்தா அணியவில்லை என்பது எனக்கு மன ரீதியாக ஏற்பட்ட கொடுமை என்று அவர் ஏற்கனவே கீழமை கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். கணவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் சௌமித்ரா தயாள் சிங் மற்றும் டோனாடி ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதி சிங் தலைமையிலான பெஞ்ச், நீங்கள் உங்கள் மனைவியை பொருள் போல பார்க்கிறீர்கள். கேட்டால் சுதந்திரம் கொடுக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். சந்தை மற்றும் பிற இடங்களுக்குத் தானாகச் செல்வார் என்ற வாதத்தை வைக்கிறீர்கள். இதை எல்லாம் ஏற்க முடியாது. பர்தா அணிய சொல்லிவிட்டு.. சுதந்திரமும் கொடுக்கிறேன் என்று எப்படி வாதம் வைக்கிறீர்கள். மனைவியின் சுதந்திரம் என்பது அவர் சம்பந்தப்பட்டது. அது அவரின் தனி நபர் விஷயம். ஒரு சிவில் சமூகத்தில் அரசு கொடுத்திருக்கும் சுதந்திரம் எல்லாம் எல்லோருக்கும் உள்ளது. அது பெண்களுக்கும் உள்ளது. இப்படி இருக்க நீங்கள் பர்தா அணிய சொல்லி கட்டாயப்படுத்துவதே தவறு. அதோடு இல்லாமல் அதை காரணம் கட்டி.. விவாகரத்து வேறு கேட்டுள்ளீர்கள். ஒரு பெண் உடை அவரின் சொந்த விருப்பம். ஒரு சிவில் சமூகத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அவர் உடை அணியலாம். அப்படிதான் ஆணும். ஆனால் அதை எல்லாம் காரணம் காட்டி நீங்கள் விவாகரத்து கேட்க முடியாது. இந்த மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது. இதன் அடிப்படையில் உங்களுக்கு விவாகரத்து வழங்க முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post