அப்பாவை விட்டு விஜய் விலகியது ஏன்? என்ன சண்டை? 25 ஆண்டுகால நண்பர் உடைத்த ரகசியம்

post-img
சென்னை: விஜய்க்கும் அவரது தந்தைக்குமான உறவில் விரிசல் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று பலருக்கும் இதுவரை புரியாத புதிராகவே இருந்து வரும் நிலையில், அந்தப் பிரிவு பற்றி விஜய்யின் நிழலாக 25 ஆண்டுகளாக உடன் இருந்தவர் பதிலளித்திருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மற்றும் டாக்டர் ராமதாஸ் இடையே அதிகார மோதல் எழுந்ததை தொடர்ந்து மேடையிலேயே பனையூரில் தனியாக அலுவலகம் போட்டுள்ளதாகவும் இனிமேல் அங்கே தன்னை சந்திக்கலாம் என்றும் அன்புமணி அறிவித்திருந்தார். அவர் அந்தத் தகவலைச் சொன்ன அடுத்த நொடியே சமூக வலைதளங்களில் அன்புமணியையும் விஜய்யையும் சேர்த்து வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் படங்களைப் பகிரத் தொடங்கி இருந்தனர். அதில் அன்புமணி பனையூர் என சொன்னதை வைத்து, 'பனையூர் அப்பாக்களால் கைவிடப்பட்டவர்களின் சரணாலயம்' என்று போட்டுக் கலாய்க்க தொடங்கிவிட்டனர். கடந்த 2020 ஆம் ஆண்டு தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி, அதனை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டார் எஸ்.ஏ.சந்திரசேகர். ஆனால், அதில் விஜய்க்கு உடன்பாடு இல்லை என்பதால் அவர் தனது வழக்கறிஞர் சார்பாக ஒரு நோட்டீஸை அனுப்பினார். கட்சியில் தனது பெயரையும் படத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று விஜய் எச்சரித்திருந்தார். எஸ்.ஏ சந்திரசேகர் ஆரம்பித்த கட்சியை 15 நாட்களில் அதற்கு முடிவுரை எழுதப்பட்டது. இதன் பின்னணியில் புஸ்ஸி ஆனந்த இருப்பதாகவும் தனது மகனை தவறாக அவர் வழிநடத்துவதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தார். ஒரு காலத்தில் அரசியலுக்கு தனது மகனைக் கொண்டுவர வேண்டும் எனப் பல வழிகளில் முயற்சிகளை எடுத்தவர் எஸ்.ஏ.சி.தான். ஆனால், விஜய் கட்சி ஆரம்பித்த போது அவரது அப்பாவுக்கு எந்தவித பதவியையும் கொடுக்கவே இல்லை என்பதோடு அவருக்கு முக்கியத்துவம் கூட அளிக்கவில்லை. விஜய் தன் குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டதாகப் பலரும் பேசினார்கள். ஆரம்பக் காலத்திலிருந்தே ஜெயலலிதா மீது விஜய்க்கு ஒரு ஆதரவு மனநிலை இருந்தது. அவர் 2005இல் ஜெயலலிதாவை தனது தந்தையுடன் சந்தித்தார். அச் சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது. அதன்பின் 2013 இல் 'தலைவா' பிரச்சினை தொடங்கியது. அப்போது ஜெயலலிதாதான் முதல்வராக இருந்தார். ஆகஸ்ட் 9 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், படம் வெளியாவதில் முட்டுக்கட்டை போடப்பட்டது. அதற்கு முன்பாக நடந்த 2011 தேர்தலில் அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு அளித்திருந்தது. அப்படி இருந்தும் படம் வெளியாவது சர்ச்சையானது. அதற்கு 'டைம் டூ லீட்' என்ற வாசகம் பிரச்சினை என்று சொன்னார்கள். அதைத்தாண்டி எஸ்.ஏ.சி. ஒருமேடையில் அதிமுக வெற்றிக்கு அணிலாக உதவினோம் என்று சொன்னதால் வந்த பிரச்சினை என்றார்கள். எது எப்படி இருந்தாலும் இதற்குப் பின்னால் ஜெயலலிதா இருக்கிறார் என உணர்ந்த விஜய் கொடநாட்டில் தங்கி இருந்த அவரை சந்திக்கச் சென்றார். ஆனால், அவர் திருப்பி அனுப்பப்பட்டார். இந்தச் சர்ச்சையின் போது இருந்தே விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் ஒரு கருத்து மோதல் ஏற்பட்டது. அது கொஞ்சம் கொஞ்சம் வளர்ந்து பூதாகரமானது. அந்தக் காலகட்டத்தில் விஜய்யுடன் இருந்தவர் பிடி செல்வக்குமார். அவர் அப்பா, மகன் இடையே ஏற்பட்ட பிரிவுக்கு என்ன காரணம் என்பது பற்றி விளக்கம் அளித்திருக்கிறார். பிடி செல்வக்குமார்தான் கடந்த 25 ஆண்டுகளாக விஜய்க்கு மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தவர். அவர் பேசுகையில், "விஜய்யின் 'தலைவா' படத்தின் ரிலீஸ் போது எஸ்.ஏ. சந்திரசேகரிடம் நான் கூட, படத்தை நாமே வாங்கி வெளியிடுவோம் என்று கோபமாகச் சொன்னேன். ஆனால், அவர் அமைதியாகவே பிரச்சினையைக் கையாண்டார். அப்போது ஜெயலலிதாவைச் சந்திப்பதற்காக கொடநாடு நேராக விஜய்யே சென்றார். அதில், எஸ்.ஏ.சிக்கு உடன்பாடு இல்லை. விஜய் தனித்து எடுத்த முடிவு. ஆனால், விஜய்யைச் சந்திக்க ஜெயலலிதா மறுத்துவிட்டார்" எனக் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "விஜய்க்கு ஆரம்பத்திலிருந்தே அரசியல் ஆர்வம் இருந்தது உண்மை. 'தலைவா' படப் பிரச்சினைக்குப் பின் அதிகாரம் கையிலிருந்தால் மக்களுக்குப் பல உதவிகளை செய்யலாம் என அவர் நினைத்தார். அவரது தந்தை மக்கள் இயக்கத்தை தனிக் கட்சியாகப் பதிவு செய் எடுத்த முயற்சி விஜய்க்குப் பிடிக்கவில்லை. அதனால் அப்பா மீது கோபம் வந்துவிட்டது. எஸ்.ஏ.சி மீது ஏன் விஜய்க்குக் கோபம் வந்தது என்பதை 25 ஆண்டுகள் கூடவே இருந்த என்னாலே கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பா மகனுக்கு இடையே உள்ள சில ரகசியங்களை வெளி ஆட்களால் கண்டுபிடிக்க முடியாது. என் பெயரையும் மக்கள் இயக்கத்தில் ஒரு பொறுப்பில் போட்டு இருந்தார் எஸ்.ஏ.சி. அது என் முடிவு அல்ல. எஸ்.ஏ.சி எதைச் சொன்னாலும் கேட்கக்கூடிய இடத்தில்தான் நான் இருந்தேன். அதனால் விஜய் என் மீது கோபம் கொண்டுவிட்டார். என்னதான் 25 ஆண்டுகள் விஜய்யின் கூடவே நான் இருந்திருந்தாலும் இன்றுவரை எஸ்.ஏ.சிக்கும் விஜய்க்குமான மனக் கசப்பு ஏன் வந்தது? எதனால் உருவானது என்பதை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post