2025 பிறக்கிறது! பாபா வங்கா, நாஸ்ட்ராடாமஸ் 2 பேரும் ஒரே மாதிரி கணிப்பு சொல்றாங்களே? அப்போ அவ்ளோதானா?

post-img
நியூயார்க்: நாளை புத்தாண்டு 2025 துவங்க உள்ள நிலையில், பாபா வங்காவும், நாஸ்ட்ராடாமஸும் ஒரே மாதிரியான தீர்க்கதரிசனத்தை பதிவு செய்துள்ளது உலக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அத்துடன் புதுவருடம் பற்றின கலக்கமும் உலக மக்களிடம் கவ்வி வருகிறது. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா சார்ந்தவர்.. 12 வயதில் கண் பார்வையை இழந்தவர்.. அப்போதிலிருந்து, பாபா வங்காவிற்கு எதிர்காலத்தில் நடக்கக்கூடிய காட்சிகள் மனதில் வருவதாக கூறியதுடன், அவைகளையெல்லாம் கணிப்புகளாக எழுதி வைத்துள்ளார்... கணிப்புகள்: இவர் உலகைப் பற்றி கணித்து எழுதி வைத்திருந்ததெல்லாம் அப்படியே நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்தவகையில், ஒவ்வொரு வருடம் முடிவிலும், துவக்கத்திலும் பாபா வங்கா எழுதி வைத்த கணிப்புகள் மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடும். அந்தவகையில் 2024-ம் ஆண்டுக்கும் கணிப்புகளை எழுதி வைத்திருந்தார். அதில், இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பநிலை காரணமாக வெட்டுக் கிளிகள் விவசாய பயிர்களை தாக்கும், மக்கள் பஞ்சத்தால் அழியப் போகிறார்கள். ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கும், புற்றுநோய், அல்சைமர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களுக்கு புதிய சிகிச்சைகள் உருவாகும், டிரம்புக்கு காது பிரச்சனை ஏற்படும்" என்றெல்லாம் கணித்திருந்த நிலையில், இவைகளில் பெரும்பாலானவை இந்த ஆண்டு நடந்துள்ளன. புத்தாண்டு: நாளை புதிய வருடம் துவங்க போகிறது.. இந்த 2025ம் ஆண்டையும் பாபா வங்கா கணித்து எழுதி வைத்திருக்கிறார்.. அதாவது, "2025ம் ஆண்டில் உலக அளவில் ஒரு மாபெரும் பேரழிவு நிகழ போகிறது. ஐரோப்பாவில் ஒரு முக்கிய பிரச்சனை எழப்போகிறது, 2025-ல் இரு நாடுகளுக்கிடையே ஒரு போர் உருவாகும், அது உலகம் முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று கணித்துள்ளார். அதேபோல வரும் வருடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு சிறப்பாக இருக்காது. ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில் உக்ரைன், ரஷ்யா எதிர்பார்க்காத வகையில் தாக்குதலை நடத்தும். இந்த போரில் உக்ரைன் தான் வெற்றிபெறும். பிரிட்டன் மன்னர் குடும்பத்திலும் பிரச்சனைகள் வெடிக்கும் என்று கணித்துள்ளார். ஜோதிடக்கலைஞர்: பாபா வங்காவை போலவே, பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரான நாஸ்ட்ரடாமஸோ வேறு காலகட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 1566ம் ஆண்டே மரணமடைந்துவிட்டார். இவரும் 2025 ஆண்டு எப்படி இருக்கும்? என்று கணித்துள்ளார்.. இதில் என்ன ஆச்சரியமென்றால், பாபா வங்காவும், நாஸ்ட்ரடாமஸோவும் வரக்கூடிய 2025ம் ஆண்டிற்கு ஒரே மாதிரியான கணிப்புகளை எழுதி வைத்திருக்கிறார்கள். அதாவது, 2025ல், பயங்கர போர்கள் வெடிக்கும் என்றும் மாபெரும் பேரழிவு ஏற்படும், ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வரும், பிரேசில் நாட்டில், எரிமலை வெடிப்பு மற்றும் மோசமான பெருவெள்ள பாதிப்பு ஏற்படும் என்று பாபா வஙகா கூறியிருக்கிறார். வாய்ப்பு: 2025ல் எதிர்பாராத போர் மற்றும் பிளேக் நோய்க்குப் பிறகு பிரிட்டன் சீரழியும் வாய்ப்புள்ளதாகவும் பிரான்ஸ் நாட்டவரான நாஸ்ட்ராடாமஸும் கணித்துள்ளார். மேலும், கடந்த காலத்திலிருந்து ஒரு மோசமான கொள்ளைநோய் திரும்பும், வானத்தின் கீழ் கொடியதாக எந்த எதிரியும் இருப்பதில்லை, சர்வவல்லமை பொருந்திய சில மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் 2025ல் சரிவடையும் என்றும், புதிய சக்திகள் உருவாகி உலகில் ஆதிக்கம் செலுத்தும் என்று நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். ஒரு மாபெரும் சிறுகோள் பூமியுடன் மோதும் அல்லது பூமிக்கு மிக அருகில் வரக்கூடிய வாய்ப்புகள்ளதாகவும், பெரிய வளர்ந்த நாடுகளுக்கு இடையிலான ஒட்டுமொத்த புவிசார் அரசியல் தொடர்பான பிரச்சனைகளால் எந்த நேரத்திலும் மோதல்கள் வெடிக்கலாம் என்றும் இருவரும் கணித்துள்ளனர். எச்சரிக்கை: அதுமட்டுமல்ல, நீண்ட காலமாக தொடரும் போர்கள் முடிவுக்கு வரும் என்றும் போர்க்களத்தால் ராணுவத்தினர் கடும் சோர்வுக்கு உள்ளாவார்கள் என்றும் 2025ம் ஆண்டு குறித்து நாஸ்ட்ராடாமஸ் பதிவு செய்துள்ளார். அதாவது, சில வேற்று கிரக சந்திப்புகளுக்கு தயாராகுமாறு நாஸ்ட்ராடாமஸ், பாபா வங்கா இருவருமே ஒரே மாதிரியாக எச்சரித்திருப்பது வியப்பை கூட்டிவருகிறது. பாபா வங்காவும், நாஸ்ட்ரடாமஸும் வேறு வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இருவருமே 2025ம் ஆண்டைக் குறித்து ஒரேவிதமாக கணித்து வைத்துள்ளது பலருக்கும் வியப்பையும், அதேசமயம் கிலியையும் தந்து கொண்டிருக்கிறது. கடைசி கணிப்பு: வரும் 5079ஆம் ஆண்டு வரை மட்டுமே பாபா வங்கா கணித்து எழுதியிருக்கிறார்.. காரணம், அந்த வருடம்தான் உலகம் அழிய போகிறதாம்.. எனவே, அத்துடன் தன்னுடைய கணிப்புகளை முடித்துக் கொண்டுள்ளார்..!!! Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post