"ஹெச் 1-பி விசா" டிரம்ப் பரபர.. இந்தியர்களுக்கு சிக்கல்? கெட்ட வார்த்தையில் திட்டிய மஸ்க்! என்னாச்சு

post-img
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக அடுத்த மாதம் டிரம்ப் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்கும் நிலையில், குடியேற்றம் தொடர்பாக விவாதம் நடந்து வருகிறது. இந்தியர்கள் அதிகம் ஹெச்- 1பி விசா திட்டம் மூலம் பலன் பெறும் நிலையில், இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். டிரம்ப்பை பொறுத்தவரை அவர் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கோஷத்துடன் ஆட்சியைப் பிடித்தவர். இதனால் அவர் பதவியேற்றவுடன் குடியேற்றம் தொடர்பாக சில கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவை பொறுத்தவரை ஹெச்- 1பி விசா முக்கியமானதாக இருக்கிறது. வெளிநாட்டைச் சேர்ந்த மிகவும் திறமையான ஊழியர்கள் இந்த ஹெச்- 1பி விசா மூலமாகவே அமெரிக்காவுக்குள் செல்கிறார்கள். இதில் பெரும்பாலும் இந்தியர்கள் மற்றும் சீன நாட்டை சேர்ந்தவர்களே அதிகம் பயன் பெறுகிறார்கள். இதனால் ஹெச்- 1 பி விசாவுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை என்பது நிச்சயம் இந்தியர்களுக்கு அதிக பாதிப்பைத் தருவதாகவே இருக்கும். இந்தச் சூழலில் தான் ஹெச்- 1 பி விசா தொடர்பாக டிரம்ப் கூறுகையில், "எனக்கு எப்போதும் (ஹெச் 1 பி) விசா பிடிக்கும். அதற்கு எப்போதுமே ஆதரவாகவே இருந்துள்ளேன். அமெரிக்காவுக்கு அது நல்லது. இதனால் தான் அந்த முறை இருக்கிறது" என்றார். இந்த ஹெச்1 பி விசா விவகாரத்தில் டிரம்பின் குடியரசு கட்சியினர் இடையே இரு வேறு கருத்துகளை நிலவி வருகிறது. ஒரு பக்கம் டிரம்பின் தீவிர ஆதரவாளர்களான பழமைவாதிகள் அனைத்து விதமான குடியேற்றத்தையும் எதிர்க்கிறார்கள். அவர்கள் ஹெச் 1 பி விசா முறையை நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். அதேநேரம் மறுபுறம் எலான் மஸ்க் தொழிலதிபர்கள், ஹெச் 1 பி விசா தொடர வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். டெக்னாலஜி துறையில் இப்போது அமெரிக்காவுக்கு ஒரு எட்ஜ் இருப்பதாகவும் அதைத் தக்கவைக்க ஹெச் 1 பி விசா தொடர வேண்டும் என்பது இவர்களின் வாதமாக இருக்கிறது. எலான் மஸ்க் கூட அமெரிக்கக் குடியுரிமை பெறும் முன்பு ஹெச் 1 பி விசா மூலமாகவே சில காலம் வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளை மாளிகையின் ஏஐ பிரிவின் ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை என்பவரை டிரம்ப் நியமித்து இருந்தார். இதைக் குடியரசு கட்சியைச் சேர்ந்த தீவிர பழமைவாதியாக அறியப்படும் லாரா லூமர் கடுமையாக விமர்சித்திருந்தார். அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கோஷத்துடன் ஆட்சியைப் பிடித்த டிரம்ப், இப்போது அமெரிக்கர்களுக்கு முக்கிய பதவிகளைத் தருவதில்லை எனச் சாடியிருந்தார். அதைத் தொடர்ந்து இணையத்தில் மிகப் பெரிய விவாதம் எழுந்தது. தீவிர பழமைவாதிகள் அனைத்து தரப்பிலான குடியேற்றத்தையும் எதிர்க்கிறார்கள். அதேநேரம் குடியரசு கட்சியிலேயே சிலர் ஹெச்1 பி விசா உள்ளிட்ட முறைகள் தொடர வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். இது குடியரசு கட்சியிலேயே இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து இல்லை என்பதையே காட்டுகிறது. எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் ஹெச் 1 பி விசா திட்டத்தை ஆதரித்தே தொடர்ந்து பேசி வருகிறார். ஒரு கட்டத்தில் 1 பி விசா திட்டத்தை எதிர்ப்போரை இனவெறியர்கள் என குறிப்பிட்ட எலான் மஸ்க், இந்த விவகாரத்தால் உள்நாட்டுப் போர் குறித்தும் எச்சரித்தார். ஹெச் 1 பி விசா முறையை எதிர்ப்போரை எலான் மஸ்க் கெட்ட வார்த்தைகளாலும் கூட திட்டினார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா மற்றும் பல நூறு நிறுவனங்களை உருவாக்கி அமெரிக்காவைப் பலப்படுத்திய நானும் என்னைப் போலப் பல தொழிலதிபர்களும் அமெரிக்காவில் இருக்கவே இந்த ஹெச் 1 பி விசா திட்டம் தான் காரணம். இதை எதிர்ப்போர் ****" என்று கெட்ட வார்த்தையில் திட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில் டிரம்ப் உள்ளிட்ட குடியரசு கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஹெச் 1 விசா திட்டத்திற்கு ஆதரவாகவே இருப்பதால் அதில் எந்தவொரு சிக்கலும் வராது என்றே தெரிகிறது.. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post