சேலம், தஞ்சை, தூத்துக்குடி! ஒவ்வொரு மாவட்டத்திலும்.. சத்தமின்றி சம்பவம்.. தமிழ்நாட்டில் ஐடி புரட்சி!

post-img
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து ஐடி பார்க்குகள் தொடங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சத்தமே இன்றி ஐடி புரட்சி நடந்து கொண்டு இருக்கிறது. சென்னை, கோவை தாண்டி தமிழ்நாடு முழுக்க பல மாவட்டங்களில் டைடல் பார்க்குகள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சமீபத்தில் தஞ்சாவூரில் டைடல் பார்க் திறக்கப்பட்டது. அதேபோல் திருப்பூரில் டைடல் பார்க் அமைக்கப்பட்டு உள்ளது. மதுரையில் டைடல் பார்க் கட்டுமானம் தொடங்க உள்ளது. சேலத்தில் டைடல் பார்க் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது. விழுப்புரத்தில் டைடல் பார்க் திறக்கப்பட்டு உள்ளது. இதேபோல் பல மாவட்டங்களில் அடுத்தடுத்து டைடல் பார்க் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பெங்களூர், ஹைதராபாத் தாண்டி ஐடி பார்க்குகள் பெரிதாக இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு மாவட்டம் ஐடி பார்க் திறக்கப்படுகிறது. அதோடு இல்லாமல் இந்த ஐடி பார்க்குகள் அமைக்கப்பட்ட உடனே.. அது நிரம்பிவிடுகிறது. எந்த ஐடி பார்க்கும் இதுவரை தமிழ்நாட்டில் காலியாக இல்லை. தூத்துக்குடி ஐடி பார்க்: நேற்றுதான் தூத்துக்குடியில் ஐடி பார்க் திறக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம். மீளவிட்டானில் சுமார் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் ரூ.32.50 கோடி செலவில் அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, நிறுவனங்களுக்கு இடஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.12.2024) தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம். மீளவிட்டானில் சுமார் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் 32.50 கோடி ரூபாய் செலவில் 83,000 சதுர அடி பரப்பளவில் அதிதவின உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார். மேலும், இம்மினி டைடல் பூங்காவில் Protogrowth he wa Prot Health Systems ஆகிய நிறுவனங்களுக்கு இடஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்கினார். இந்தியாவிலேயே மின்னணு சாதனங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்கி வருவதோடு, நாட்டிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும் திகழ்கிறது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் சென்னை ராஜின் காந்தி சாலையில் டைடல் பூங்கா அமைத்தது தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட அடித்தளமாக அமைந்தது. இல்லரசு பொறுப்பேற்றவுடன் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது மாநிலம் முழுவதும் பரவலாக அமைவதை உறுதி செய்திட முதற்கட்டமாக விழுப்புரம், வேலூர். திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று 2021-2022ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு- செலவுத்திட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. திறந்து வைக்கப்பட்ட மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட மினி டைடல் பூங்காக்கள் குறித்த விவரங்கள் விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலம் கிராமத்தில் 31 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மிel cami 17.2.2024 அன்றும், தஞ்சாவூர் மாவட்டம். பிள்ளையார்பட்டி கிராமத்தில் 30.50 கோடி ரூபாய் செலவிலும், சேலம் மாவட்டம். கருப்பூர் கிராமம் ஆணைக்கவுண்டன்பட்டியில் 29.50 கோடி ரூபாய் செலவிலும் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காக்கள் 23.9.2024 அன்றும் தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டன மேலும். வேலூர் மாவட்டம், மேல்மொனாவூர்- அப்துல்லாபுரத்தில் 30 கோடி ரூபாய் செலவில் மிடைடல் பூங்கா அமைப்பதற்கு 18.02.2023 அன்றும், திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையத்தில் 44 கோடி ரூபாய் செலவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு 24.06.2022 அன்றும் மாண்டிமிகு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். அதன் கட்டுமானப்பணிகள் தமிதமாக நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி, மினி டைடல் பூங்கா திறந்து வைத்தல் தூத்துக்குடி மாவட்டம். மீளவிட்டான்-1 பகுதியில் 4:15 ஏக்கர் நிலப்பரப்பளவில் 32 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 63.000 சதா அடி பரப்பளவில் அடித்தளம் மற்றும் 4 தளங்களுடன் மினி ாட்டல் பூங் கட்டுவதற்கு 19.05.2023 அன்று முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பணியானது மிகக் குறுகிய காலத்திலேயே நிறைவடைந்து அதிநவீன உட்கட்டமைப்பு வாதிகளுடன் சுவடிய மினி டைடல் பூங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டடத்தில் குத்தகைக்கு விடப்படக்கூடிய பகுதியான 50.937 சதுர அடி முழுவதும் நிறுவனங்களுக்கு திறந்து வைக்கப்பட்ட இன்றைய தினமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம். தகவல் தொழில்நுட்ப துறையில் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் படித்த இளைஞர்கள் குறிப்பாக பெண்கள் அதிக வேலைவாய்ப்பு பெறுவதுடன், அம்மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும், என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post