பாகிஸ்தானில் பெய்த பணமழை! மகன் திருமணத்துக்காக விமானத்தை வாடகைக்கு எடுத்து தொழிலதிபர் செய்த சம்பவம்

post-img
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தனது மகனின் திருமண விழாவையொட்டி வாடகைக்கு விமானத்தை எடுத்து பறந்த தொழிலதிபர் ஒருவர் மணப்பெண்ணின் வீட்டை நோக்கி லட்சக்கணக்கான பணத்தை எடுத்து பூ போல் வீசிய வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. திருமணம்.. ஒவ்வொரும் தங்களின் திருமணத்தை வித்தியாசமாக நடத்த வேண்டும் என்று நினைக்கின்றனர். ஒரு தரப்பினர் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து ஆடம்பரமாக திருமணம் செய்ய விரும்புகின்றனர். இன்னொரு தரப்போ குறைந்த பண செலவில் சிம்பிளாக திருமணத்தை நடத்த விரும்புகின்றனர். சமீபத்தில் கூட விஜய் டிவி நீயா - நானாவில் பேசிய இளம்பெண் ஒருவர் தனது திருமணத்தின்போது தனது வருங்கால கணவருடன் தான் ஹெலிகாப்டரில் வந்து என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து அந்த இளம்பெண் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டார். இந்நிலையில் தான் அண்டை நாடான பாகிஸ்தானில் மகன் திருமணத்தையொட்டி தொழிலதிபர் ஒருவர் செய்த சம்பவம் அனைவரின் புருவத்தையும் உயர்த்தி உள்ளது. அதாவது பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் ஹைதராபாத் என்ற நகர் உள்ளது. இந்த நகரில் உள்ள இளம்பெண்ணுக்கும், இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தையொட்டி மணமகனின் தந்தை வாடகைக்கு விமானத்தை எடுத்து இருந்தார். தனது மகன், மருமகள் மற்றும் உறவினர்களை விமானத்தில் அழைத்து சென்றார். அதுமட்டுமின்றி தனது மகனுக்கு பெண் கொடுத்த சம்பந்தி வீட்டாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் விமானத்தில் வலம் வந்தார். விமானம் வானில் பறக்கவே தொழிலதிபர் சார்பில் சம்பந்தி வீட்டை நோக்கி லட்சக்கணக்கான பணம் வீசப்பட்டது. வானில் இருந்து பணம் மழையாக கொட்டினால் எப்படி இருக்குமோ அந்த வகையில் ரூபாய் நோட்டுகள் பூமியை நோக்கி வந்தன.வானில் இருந்து பணம் கொட்டுவதை பார்த்த அந்த பகுதி மக்கள் அதனை எடுத்து சென்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதற்கு சிலர் பாராட்டு தெரிவிக்கும் அதேவேளையில் பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர். எக்ஸ் பக்கத்தில் ஒருவர், ‛‛இப்போது வானிலை இருந்து மாப்பிள்ளை வீட்டார் பணத்தை அள்ளி வீசுகிறார். இதற்கும் சேர்த்து பெண் வீட்டாரிடம் தான் அதிக வரதட்சணை கேட்பார். இதுவெல்லாம் இப்போது தேவையா?'' என்று கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தான் தற்போது பொருளாதார நெருக்கடி சிக்கி தவித்து வருகிறது. மக்களின் அன்றாட தேவைகளையே அந்த நாட்டு அரசு சிரமப்பட்டு தான் பூர்த்தி செய்கிறது. இப்படியான சூழலில் பாகிஸ்தானில் மகன் திருமணத்துக்கு வாடகைக்கு விமானத்தை எடுத்து மணமகள் வீட்டின் மீது பூ போல் பணத்தை அள்ளி வீசியா வீடியோ அந்த நாட்டில் ‛டாக் ஆஃப் தி' டவுனாக மாறி உள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post