இந்தியாவின் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு! தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எவ்வளவு சொத்து தெரியுமா?

post-img
சென்னை: இந்தியாவில் மிகவும் பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடத்தில் உள்ளார். மிகவும் ஏழை முதல்வராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எத்தனையாவது இடத்தில் இருக்கிறார் தெரியுமா? ஏ.டி.ஆர் (ADR) எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் என்.இ.டபிள்யூ (NEW) எனப்படும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் இணைந்து இந்தியாவில் உள்ள 31 மாநில முதலமைச்சர்கள், தேர்தல் பிரமாண வாக்கு மூலத்தில் சமர்ப்பித்துள்ள தகவல்களை ஒருங்கிணைத்து, பணக்கார முதல்வர்கள், ஏழை முதல்வர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள 31 முதல்வர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,630 கோடி. ஒரு முதலமைச்சரின் சராசரி வருமானம் ரூ. 13,64,310 ஆகும், இது இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானத்தை விட 7.3 மடங்கு அதிகம். 31 முதல்வர்களில், 2 பேர் பில்லியனர்களாக உள்ளனர். அதாவது 100 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த முதல்வர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.52.59 கோடியாக உள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பணக்கார முதலமைச்சராக ஆந்திரா முதல்வர்சந்திரபாபு நாயுடு உள்ளார். அவருக்கு ரூ. 931 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பணக்கார முதல்வர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு ரூ. 332 கோடி சொத்து மதிப்புடன் உள்ளார். கர்நாடகா காங்கிரஸ் முதல்வர் சித்தராமயைா ரூ. 51 கோடி சொத்து மதிப்புடன் இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியு ரியோ ரூ.46 கோடி சொத்துடன் 4வது இடத்தில் உள்ளார். மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ரூபாய் 42 கோடி சொத்துடன் 5வது இடத்தில் உள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ரூ.38 கோடி சொத்து மதிப்புடன் 6வது இடம் பிடித்துள்ளார். தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ரூ.30 கோடி சொத்துடன் 7வது இடம் பிடித்துள்ளார். ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ரூ.25 கோடி சொத்துகளுடன் 8வது இடத்தைப் பிடித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பட்டியலில் 14-வது இடம் பிடித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு ரூ.8 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.8,88,75,339 சொத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எந்தக் கடனும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி ரூ. 15 லட்சம் சொத்து மதிப்புடன் ஏழை முதல்வர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதாவது, பணக்கார முதல்வர்கள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறார் தொடர்ந்து 3வது முறையாக முதலமைச்சராக ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜி. ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ரூ.55 லட்சம் சொத்து மதிப்புடன் ஏழை முதல்வர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திலும், கேரள முதல்வர் பினராயி விஜயன் ரூ. 1 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிக கிரிமினல் வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். இவர் மீது 89 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் 72 -க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்திய தண்டனை சட்டத்தின் கீழான தண்டனைக்குரிய குற்ற வழக்குகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரேவந்த் ரெட்டிக்கு எதிராக இரண்டு குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரேவந்த் ரெட்டிக்கு அடுத்தபடியாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மீது 47 வழக்குகள் உள்ளன. இதில் 11 வழக்குகள் இந்திய தண்டனை சட்டத்தின் கீழான தண்டனைக்குரிய வழக்குகள் என ஏடிஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post