இருதலைக்கொள்ளி பாகிஸ்தான்! போர் vs முக்கிய பொறுப்பு.. உற்று நோக்கும் இந்தியா!

post-img
டெல்லி: ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான் முட்டல் மோதலில் இருக்கிறது. இந்த உரசல்கள் எப்போது வேண்டுமானாலும் போராக வெடிக்கலாம். இப்படி இருக்கையில் இந்த ஆண்டு முதல் பாகிஸ்தான், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக தனது பணியை தொடங்குகிறது. இதை இரண்டையும் இந்தியா உற்று கவனித்து வருகிறது. முக்கிய பொறுப்பு: ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நிரந்தரமற்ற உறுப்பினர்கள் மாற்றப்படுவார்கள். அந்த வகையில், ஈக்குவடார், ஜப்பான், மால்டா, மொசாம்பி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. எனவே அந்த நாடுகளை பதிலாக புதிய நாடுகளை தேர்ந்தெடுக்க முடிவெடுக்கப்பட்டது. இந்த பணி கடந்த ஜூன் மாதமே தொடங்கிவிட்டது. இப்படியாகத்தான் பாகிஸ்தான், டென்மார்க், கிரீஸ், பனாமா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் தற்காலிக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாடுகளுக்கு பெரிய அளவில் அதிகாரங்கள் இல்லை. ஆனாலும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்க முடியும். இந்நாடுகளின் பதவிக்காலம் இன்று முதல் தொடங்குகிறது. சிக்கல் என்ன?: இந்த முறை பாகிஸ்தான் உறுப்பினராக தனது பணியை தொடங்குகிறது. இதில்தான் சிக்கல்கள் இருக்கின்றன. அதாவது, ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. ஒரு வேளை இது போராக வெடித்தால், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நாடே போரில் ஈடுபடுகிறது? என்று மற்ற நாடுகள் கேள்வி எழுப்பும். இந்த கேள்விகள் பாகிஸ்தானின் புதிய பதவிக்கு வேட்டு வைத்துவிடும். எனவே இந்த பக்கமும் போக முடியாமல், அந்த பக்கமும் போக முடியாமல் பாகிஸ்தான் இருதலைக்கொள்ளியாக சிக்கியுள்ளது. பாகிஸ்தானின் புதிய பொறுப்புகள்: ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராகியுள்ள பாகிஸ்தான், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்பது, மோதல் விவகாரங்களில் ஈடுபடாமல் பேச்சுவார்த்தையில் ஈடுபடுதல், தற்காலிக தலைமை பொறுப்பு வகித்தல் என பல முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே, இனி வரும் நாட்களில் ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குல் நடத்துவது சற்று கேள்விக்குறிதான் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். இந்தியாவின் கவனம்: ஆப்கானிஸ்தானுடன் மட்டுமல்லாது இந்தியாவுடனும் எந்த மோதல் போக்கிலும் இப்போதைக்கு பாகிஸ்தானால் ஈடுபட முடியாது. ஆனால், தற்காப்புக்காக பல விஷயங்களை பாகிஸ்தானால் செய்ய முடியும். அதாவது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு எதிரான குற்றச்சாட்டை எழுப்பி அதை விவாதமாக்க முடியும். இங்குதான் இந்தியா சற்று கவனமாக இருக்க வேண்டும். விவாதங்கள் உருவாகாதவாறு இந்தியாவின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். மட்டுமல்லாது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தனக்கான ஆதரவு வட்டத்தை வைத்திருக்க வேண்டும். ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள்: முன்னரே சொன்னதை போல, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் மாற்றப்படுகிறார்கள். ஆனால் எல்லா நாடுகளாலும் உறுப்பினராகிவிட முடியாது. ஐநா பொது சபையால் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். இதற்கான தேர்தல் 10 நாடுகளுக்கு நடத்தப்படும். இதில் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு - 3 இடங்கள் ஆசியா-பசிபிக் நாடுகளுக்கு - 2 இடங்கள் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு - 2 இடங்கள் மேற்கு ஐரோப்பா மற்றும் பிற நாடுகளுக்கு - 2 இடங்கள் கிழக்கு ஐரோப்பா நாடுகளுக்கு - 1 இடம் ஒதுக்கப்படும். இதில் தேர்வாக ஐநா பொதுச் சபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். இப்படித்தான் பாகிஸ்தான் தேர்வாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post