அரசு பேருந்து டிரைவர், கண்டக்டருக்கு வழிகாட்டுதல் வெளியீடு.. பஸ்ஸில் போலீசாருக்கு கட்டணமில்லா பயணம்

post-img
சென்னை: பேருந்துகளில் காவல்துறையினருக்கு கட்டணமில்லா பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.. அத்துடன் அரசு பேருந்துகளில் காவல்துறையினருக்கு கட்டணமில்லா பயணம் வழங்குவது தொடர்பாக ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. என்ன காரணம்? பாதுகாப்பான பயணத்தை பொதுமக்கள் எப்போதுமே மேற்கொள்ள வேண்டும் என்பதில், தமிழக போக்குவரத்து துறை மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. எனவே, பேருந்து ஓட்டுநர்களுக்கும், நடத்துநர்களுக்கும், போக்குவரத்து துறை அவ்வப்போது அறிவுரைகளையும், முக்கிய உத்தரவுகளையும் வழங்கி வருகிறது.. வீடியோ அதிர்வலை: கடந்த வாரம்கூட, அரசு பஸ் டிரைவர் ஒருவர், ஒரு கையில் செல்போனில் பேசியபடியும், மறு கையில் பஸ்சை ஓட்டியும் சென்றிருக்கிறார்.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானதையடுத்து, இதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இறுதியில், செல்போன் பேசிக்கொண்டே பஸ்ஸை ஓட்டிய, மதுராந்தகம் பணி மனையை சேர்ந்த டிரைவர் கனகராஜை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) உத்தரவிட்டது. அத்துடன், போக்குவரத்துத்துறை இதுதொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தது. அதில், அரசு பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என்று எச்சரித்திருந்தது. வார்னிங்: இந்நிலையில், அரசு பேருந்துகளில் காவல்துறையினருக்கு கட்டணமில்லா பயணம் வழங்குவது தொடர்பாக ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது... இதற்கு காரணம், அரசு பஸ்ஸில் கட்டணமில்லா பயணம் தொடர்பாக கடந்த மே மாதம் கண்டக்டருடன், போலீசாருக்கு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை தந்திருந்தது. இதையடுத்து, முதல்வரின் அறிவிப்புபடி காவலர்களுக்கு கட்டணமில்லா பயணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனவே, காவலர்களின் கட்டணமில்லா பயணம் தொடர்பாக ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. புதிய அறிவுறுத்தல்கள்: அந்த அறிவிப்பில், "அரசு போக்குவரத்துக் கழகங்களில் இயங்கும் நகர், புறநகர் பேருந்துகளில் (ஏசி தவிர்த்து) காவலர்கள் பணி செய்யும் மாவட்டத்துக்குள் பயணிக்கும் வகையில் இலவச பயண அட்டை வழங்கப்படவுள்ளது. இதனடிப்படையில் கட்டணமில்லா பயணத்துக்கு அனுமதிக்க வேண்டும். இந்த பயண அட்டை குறிப்பிட்ட மாவட்டத்துக்குள்ளாகவும், கால அளவுக்கும் மட்டுமே செல்லுபடியாகும். அட்டையை காண்பிக்க தவறினால் அபராதம் வசூலிக்கலாம். பயண அட்டையை தவறாக பயன்படுத்தினால் பறிமுதல் செய்து, நடவடிக்கை மேற்கொள்ளலாம். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போது, வாரண்ட் பெற வேண்டும்" என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post