கோவை காந்திபுரத்தில் பிரபல பிரியாணி கடையில் புழு இருப்பதாக நாடகம்.. சிசிடிவியால் சிக்கிய இளைஞர்

post-img
கோவை: கோவை காந்திபுரத்தில் உள்ள உணவகத்தில் பிரியாணியில் பூச்சி இருந்ததாக வீடியோ எடுத்ததுடன், கடை ஊழியர்களிடம் சண்டையிட்டு பணம் தராமல் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். சாப்பிட்டு சென்றுவிட்டார். பராவாயில்லை என்று அமைதியாக இருந்த ஓட்டல் ஊழியர்களை,இளைஞர் செய்த செயல் ஆடிப்போக வைத்துள்ளது. அதை வீடியா எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இதையடுத்து சிசிடிவியை பார்த்த போது தான் அவர் வேண்மென்றே பூச்சியை போட்டு வீடியோ எடுத்தது தெரியவந்தது கோவை காந்திபுரம் என்பது கோவையின் மையப்பகுதி மட்டுமின்றி, மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியாகும். இங்கு ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் அமைந்துள்ளது. காந்திரபுரம் பகுதிக்கு நாள்தோறும் பல ஆயிரம் பேர் வந்து செல்கிறார்கள்.. இந்நிலையில் காந்திரபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள புகழ் பெற்ற பிரியாணி கடை ஒன்றுக்கு பெண்ணுடன் இளைஞர் ஒருவர் சாப்பிட சென்றுள்ளார். பிரியாணியை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்கள்.பிரியாணியை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, அதில் பூச்சி இருப்பதாக கூறி ஆவேசமாக சென்று காண்பித்துள்ளார். அவர் அங்கிந்த மக்கள் சமாதானம் செய்துள்ளனர். அப்போது பூச்சி இருப்பதாக சண்டை போட்டுவிட்டு, சாப்பிட்ட உணவிற்கு பணம் தராமல் சென்றுவிட்டார். பிரியாணி சாப்பிட்டு விட்டு சென்ற இளைஞர், பூச்சி இருப்பது போன்ற வீடியோவையும், அதன்பிறகு நடந்த சம்பவத்தையும் தனது செல்போனில் பதிவு செய்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ கோவை பகுதியில் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து சந்தேகம் அடைந்த உணவகத்தினர், பூச்சி இருந்தது உண்மை தானா என்பதை ஆய்வு செய்ய கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். பிரியாணி கொண்டு வந்தவர் தொடங்கி, சாப்பிட வைக்கப்பட்ட சப்ளையர் வரை ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்தனர். அப்போது பிரியாணியில் பூச்சி இருப்பதாக வீடியோ வெளியிட்டச இளைஞரும், அவருடன் வந்த பெண்ணும்தான் பூச்சியை பிரியாணி தட்டில் போட்டு, திட்டமிட்டு அவதூறு பரப்பியிருந்தார்களாம். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர்கள், கோவை காந்திபுரத்தில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக காட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன் ஒருவர், மிக மிகக் கேவலமான அற்பச் செயல். இனி உண்மையிலேயே கரப்பான் பூச்சி இருந்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள். மட்டுமல்ல இனி எல்லா டேபிள்களையும் கவர் செய்து சிசிடிவியை எல்லா உணவகங்களும் பொருத்த வேண்டும். அப்பவே சிசிடிவியை பார்த்து அவனை 4 சாத்து சாத்தியிருக்கணும் என்று கூறியுள்ளார். இன்னொரு நெட்டிசன் கூறுகையில், சாப்பாடு வேனும் பசிக்கிறது என்று சொன்னாலே போதும் ஒருசிலர் இலவசமாக உணவு கொடுப்பார்கள். அதை விட்டு இப்படி செய்வது மனித ஜென்மம் அல்ல என்று கூறியுள்ளார். இன்னொரு நெட்டிசன் கூறுகையில்,. சமீப காலமாக இப்படி திட்டமிட்டு பெரிய அசைவ உணவுகளில் இது மாதிரி கோஷ்டி புழு விழுந்துருச்சு பூச்சி விழுந்துருச்சு என்று அவதூறு பரப்புகிறார்கள் இவர்களது பின்னணி விசாரிக்க வேண்டும் எனறு கூறியுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post