அண்ணா பல்கலை. வழக்கின் விசாரணை விபரங்கள் தவறுனு டிஜிபிக்கு எப்படி தெரியும்? அதிமுக இன்பதுரை கேள்வி

post-img
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வழக்கு தொடர்பான தகவல்கள் தவறு என டிஜிபி எப்படி கூற முடியும்? எஸ்ஐடிக்கு மட்டுமே தெரிந்த விசாரணை விபரங்கள் டிஐிபிக்கு எப்படி தெரியும் என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தனது எக்ஸ்வலை பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஊடங்கள் நேற்று வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழக வழக்கு தொடர்பான தகவல்கள் தவறு என டிஜிபி கூறக் கூடாது! தவறாகவே இருப்பினும் எஸ்ஐடிதான் அதை மறுக்க முடியும், டிஜிபி அல்ல! விசாரணை அதிகாரத்தை 3 பெண் அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கி உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில் விசாரணை விபரம் டிஜிபிக்கு எப்படி தெரிந்தது என இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post