நெருங்கும் பொங்கல்.. மகளிர் உரிமை தொகை இன்னும் வரலையே.. தமிழக அரசின் அந்த முடிவு.. என்னங்க ஆச்சு?

post-img
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமை தொகை முன்கூட்டியே வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை மகளிர் உரிமை தொகை தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதுவரை முன்கூட்டியே பணம் வழங்குவதற்கான முடிவுகளும் எதுவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விரைவில் நல்ல செய்தி சொல்ல போவதாக தெரிவித்து இருந்தார். ஆனால் இன்னமும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் மக்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகையாவது முன்கூட்டியே வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொங்கலை முன்னிட்டு மகளிர் உரிமை தொகை முன்கூட்டியே வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது,மாத தொடக்கத்திலேயே பெரும்பாலும் வரவு வைக்கப்படும் அல்லது 10ம் தேதிக்கு முன்னதாகவே வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் பரிசு ரொக்கமாக வழங்கப்படாத நிலையில்.. மகளிர் உரிமை தொகையாவது முன்கூட்டியே வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொங்கல் தொகுப்பில் ரூ.1000 தரப்படாததன் காரணம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று விளக்கம் அளித்தார். இதில் மகளிர் உரிமை தொகை குறித்தும் முக்கியமான் அறிவிப்பை வெளியிட்டார். பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படவில்லை. நல்ல சூழல் விரைவில் உருவாகும். அதற்கு முன் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000ஐ பொங்கலுக்கு முன்பாக வழங்க பரிசீலிக்கிறோம் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார். ஆனால் அதற்கான அறிவிப்புதான் இன்னும் வெளியாகவில்லை. பொங்கல் பரிசுத்தொகை தொடர்பாக தமிழக அரசு எடுத்த முடிவு மக்களிடையே எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமான ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளதாம். பொங்கல் பரிசு தொடர்பான முக்கியமான அறிவிப்பை தமிழக வெளியிட்டு உள்ளது. அதன்படி பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசு அறிவிப்பில், 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தார்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும். இதன் மூலம் மொத்தமாக 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள் என்று அறிவித்து உள்ளனர். பொதுவாக பொங்கலுக்கு 21 பொருட்கள் வழங்கப்படும். அதேபோல் ரூ.1000 வழங்கப்படும். ஆனால் நிதி நிலவரங்களை காரணம் காட்டி இந்த முறை தமிழக அரசு ரூ.1000 பணம் வழங்கவில்லை. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் சென்றுள்ளதாம். எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக பயன்படுத்த போகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நெருங்குகிறது. அந்த தேர்தலில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இதை பயன்படுத்தலாம். மக்கள் இடையே இது எதிர்ப்பை சம்பாதிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று முதல்வர் ஸ்டாலினுக்கு சென்றுள்ளதாம். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post