வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் 2025! உங்கள் பெயரை சரிபார்ப்பது எப்படி? ஈசியான 3 வழிகள் இதோ!

post-img
சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை எப்படி சரி பார்ப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி கடந்த அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்த பணி துவங்கியது. ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், புகைப்பட அடையாள அட்டை முரண்பாடு நீக்குதல், தரமான புகைப்படங்களை இணைத்தல், பெயர் மாற்றம் முகவரி மாற்றம் உள்ளிட்டவை செய்யப்பட்டது. 29ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதிலும் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றிற்காக விண்ணப்பம் அளிக்க ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. மேலும் வாக்குச்சாவடிகளிலும், ஆன்லைன் வழியாகவும் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 16 மற்றும் 17, 23, 24 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. சுமார் 69 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்த நிலையில் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதன்படி தமிழகத்தில் மொத்தம் 6 கோடி 36 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். மூன்று கோடியே 11 லட்சம் ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 24 லட்சம் பெண் வாக்காளர்களும், 9,120 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இருக்கின்றனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.91 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை எப்படி சரி பார்ப்பது? நீங்கள் அளித்த மாற்றங்கள் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறதா? என்பது குறித்து ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் தெரிந்து கொள்ளலாம். உங்கள் வாக்குச்சாவடி மையங்களில் இதனை தெரிந்து கொள்ளலாம். மேலும் தாலுகா அலுவலகங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதன் மூலமும் உங்கள் பாகம் எண், வாக்குச்சாவடி மையம், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றை வைத்து சரிபார்த்துக் கொள்ளலாம்.. ஆன்லைனில் எப்படி சரி பார்ப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.. 1.முதலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் https://www.eci.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று, கீழே ஸ்க்ரால் செய்தால், Electors என்பதில், 4வதாக search name in voter list என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.. 2. அதில் Search by EPIC என வரும் நிலையில், மொழியை தேர்ந்தெடுக்கலாம். பின்னர் உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிட்டு உங்களது மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும். அதில் Captcha Code என்டர் செய்து search என கொடுத்தால் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான விபரங்கள் கிடைக்கும்.. 3.அடுத்ததாக Search by Details என வரும் அதில் உங்கள் மாநிலத்தை தேர்வு செய்து மொழியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பிறகு உங்கள் பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம், மாவட்டம், சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றை கொடுத்து Captcha Code எண்டர் செய்து search எனக்கு கொடுத்தால் உங்கள் விபரங்கள் கிடைக்கும்.. 4. அடுத்ததாக உங்கள் மொபைல் எண் மூலமும் வாக்காளர் விபரங்களை அறியலாம். Search by Mobile என்பதனை கிளிக் செய்து உங்கள் மாநிலத்தை தேர்ந்தெடுத்து மொழியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பிறகு உங்கள் மொபைல் எண்ணை பதிவிட்டு Captcha Code பதிவு செய்தால் ஒரு ஓடிபி கிடைக்கும். அந்த ஓடிபி-ஐ பதிவிட்டு search எனக்கு கொடுத்தால் உங்கள் வாக்காளர் விபரங்களை பெற முடியும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post