அமெரிக்காவை விடுங்க.. இந்தியர்களுக்கு அடித்த மெகா ஜாக்பாட்.. விசா ரூல்ஸை மாற்றிய நியூசிலாந்து!

post-img
வெல்லிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், அவர் ஹெச்1 பி விசா நடைமுறையில் மாற்றம் கொண்டு வரலாம் எனச் சொல்லப்படுகிறது. இதனால் அங்குள்ள இந்தியர்கள் அச்சத்தில் உள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க.. யாருமே எதிர்பார்க்காத வகையில் மற்றொரு நாடு விசா விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இது அங்குள்ள பாதிக்குமா என்பது குறித்து நாம் பார்க்கலாம். அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்த போவதாகத் தொடர்ந்து பேசி வருகிறார். அதேபோல சட்டப்பூர்வ குடியேற்ற முறைகளான ஹெச் 1 பி விசா திட்டங்களில் கூட மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்று டிரம்ப் கட்சியில் இருந்தே கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஹெச் 1 பி விசா திட்டத்தால் இந்தியர்களே அதிகம் பயன் பெறும் நிலையில், இது அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க யாருமே எதிர்பார்க்காத வகையில் விசா விதிகளை மற்றொரு நாடு மாற்றியிருக்கிறது. தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு மேலே அமைந்துள்ள குட்டி நாடு நியூசிலாந்து. இங்குப் பல ஆண்டுகளாகவே தொழிலாளர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்தச் சூழலில் குடியேற்ற நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் வகையில் நியூசிலாந்து அதன் விசா மற்றும் வேலைவாய்ப்பு தேவைகளில் மாற்றத்தை அறிவித்துள்ளது. அனுபவம், ஊதியம் மற்றும் விசா காலம் என முக்கியமான விஷயங்களில் உள்ள பிராசஸை பணியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் என இருவருக்கும் எளிதாக்குவதை இது நோக்கமாகக் கொண்டு இருக்கிறது. தொழிலாளர்கள் தேவை உச்சத்தைத் தொட்டு இருக்கும் நிலையில், புலம்பெயர்ந்தோருக்கான குறைந்தபட்ச பணி அனுபவத்தை 3 ஆண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளாகக் குறைத்துள்ளது. திறமையான தொழிலாளர்களை நியூசிலாந்துக்குள் அழைத்து வர இது உதவும் என்றும் குறிப்பாக நியூசிலாந்தில் வேலை தேடும் இந்திய புலம்பெயர்ந்தோருக்கு இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல சீசனல் தொழிலாளர்கள் (ஆண்டில் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வேலை செய்வார்கள்) நியூசிலாந்தில் தங்குவதற்கு இரண்டு புதிய பாதைகளையும் அந்நாடு அறிமுகப்படுத்தியுள்ளது.. அதன்படி அதிக அனுபவம் கொண்ட தொழிலாளர்கள் பல முறை நியூசிலாந்து வந்து செல்ல உதவும் 3 ஆண்டுகள் செல்லுபடியாகும் விசாவை பெறலாம். அதேபோல குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு ஏழு மாத ஒற்றை நுழைவு விசாவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், AEWV மற்றும் SPWV விசா மூலம் வேலை செய்ய வருவோருக்குக் குறிப்பிட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்ற விதி இருந்தது. அந்த விதியை நியூசிலாந்து நீக்கியுள்ளது. சந்தை மதப்பிற்கு ஏற்ப ஊதியத்தை வழங்கும் உரிமையைத் தொழிலாளர்களுக்கு நடந்துள்ளது. அதேபோல இதற்கு முன்பு வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்க நியூசிலாந்து நிறுவனங்கள் Work and Income's 21-day mandated recruitment period என்பதைக் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது நியூசிலாந்தில் முதலில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு, 21 நாட்களில் சரியான ஆள் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்க வேண்டும். இந்த விதியை நியூசிலாந்து இப்போது நீக்கியுள்ளது. தேவைப்பட்ட நேரத்தில் உடனடியாக வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்கலாம். மேலும், கட்டுமான துறையில் குறைந்தபட்சம் 35% உள்ளூர் நபர்களை வேலைக்கு நியமிக்க வேண்டும் என்ற விதி இருந்த நிலையில், அது 15%ஆக இப்போது குறைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டில் தொழிலாளர்களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவும் சூழலில், அதைக் கருத்தில் கொண்டே இந்த முடிவுகளை நியூசிலாந்து அரசு எடுத்துள்ளது. அமெரிக்கா புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில், நியூசிலாந்து அதற்கு நேர்மாறாக அவர்களை வரவேற்கத் தேவையான மாற்றங்களைச் செய்துள்ளது. இது அங்குள்ள இந்தியர்களுக்கு மிகப் பெரியளவில் உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post