நாட்டின் முதல் விவாகரத்து.. எப்போது வழங்கப்பட்டது! ராணி விக்டோரியா வரை போன பஞ்சாயத்து! இது தெரியுமா

post-img
டெல்லி: இந்த காலத்தில் கூட பெண்கள் விவாகரத்து பெறும் போது அவர்களை சமூகம் மோசமான கண்ணோட்டத்தில் தான் பார்க்கும். என்ன தான் பெண்கள் மீது நியாயம் இருந்தாலும் அவர்கள் தவறு செய்தது போலத் தான் எடை போடும்.. இந்த காலத்திலேயே சமூகம் இப்படி இருக்க நமது நாட்டின் முதல்முதலில் விவாகரத்து பெற்ற பெண் யார்! அவர் எதற்காக விவாகரத்து பெற்றார் என்பது குறித்த தகவல்கள் வியப்பை அளிப்பதாக இருக்கிறது. அது குறித்து நாம் பார்க்கலாம். நமது நாட்டில் முதல் விவாகரத்து எப்போது நடந்தது என்ற கேள்விக்குப் பலருக்கும் பதில் தெரியாது.. உண்மையில் 1885ம் ஆண்டிலேயே நமது நாட்டின் முதல் விவாகரத்து நடந்துவிட்டது. ஆம்! நமது நாட்டில் ருக்மாபாய் என்ற இந்து பெண் தான் முதலில் 1885ம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றார். அந்த காலத்தில் விவாகரத்து பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல.. அவர் விவாகரத்து பெறவே பெறும் போராட்டத்தை நடத்த வேண்டி இருந்தது. ருக்மாபாய்க்கு 11 வயதாக இருந்த போதே 19 வயதான தாதாஜி பிகாஜி என்பவருடன் திருமணம் நடந்துவிட்டது. மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவில் ருக்மாபாய் இருந்தார். இதனால் அவர் தனது தாய் வீட்டில் தங்கியபடியே தனது படிப்பைத் தொடர்ந்தார். ஆனால், ருக்மாபாய் படிப்பதை அவரது கணவர் விரும்பவில்லை. இதனால் தன்னுடன் இருக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ருக்மாபாய் அதற்கு மறுத்த நிலையில், அவர் மீது போலீசில் வழக்கும் போட்டார் அவரது கணவர் தாதாஜி பிகாஜி. தனக்குச் சின்ன வயதிலேயே திருமணம் நடந்துவிட்டதாகவும் இதனால் (அவரது அப்போதைய கணவர்) உடன் தங்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் ருக்மாபாய் வாதிட்டார். ருக்மாபாய் இப்படிச் சொல்வதை அப்போது மக்களால் ஏற்கவே முடியவில்லை. கல்வி தான் ருக்மாபாய் மனதைக் கெடுத்துவிட்டதாக எல்லாம் சொன்னார்கள்.. நீதி அமைப்பும் கூட அப்போது ஆண்களுக்குச் சாதகமாகவே இருந்தது. வழக்கு விசாரணை முடிந்து 1887ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ருக்மாபாய் உடனடியாக கணவருடன் செல்ல வேண்டும் என்றும் இல்லையென்றால் 6 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. எந்தவொரு தயக்கமும் இல்லாமல் சிறை செல்ல சம்மதித்தார் ருக்மாபாய். அந்த நேரத்திலும் அவர் தனது கணவருடன் சேர மறுத்துவிட்டார். ஒரு துணிச்சலான பெண்ணாக இருந்த ருக்மாபாய் சிறையில் இருந்தவாறே செய்தித்தாள்களில் எழுதத் தொடங்கினார். இந்து லெடி என்ற பெயரில் அவர் பாலின சமத்துவம், சமூக சீர்திருத்தங்கள், பெண்கள் உரிமைகள் எனப் பல தலைப்புகளில் கட்டுரை எழுதி வந்தார். இது ஒரு கட்டத்தில் ராணி விக்டோரியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. என்ன நடந்தது என்பதை ராணி விக்டோரியா விசாரித்துள்ளார். அதில் ருக்மாபாய்க்கு அநீதி ஏற்பட்டுள்ளதை உணர்ந்த ராணி விக்டோரியா அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தார். ருக்மாபாய் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், அவருக்குக் கடைசியில் விவாகரத்தும் வழங்கப்பட்டது. இது ருக்மாபாய்க்கு மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் கிடைத்த ஒரு பெரிய வெற்றியாகவே பார்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்கு பிறகே குழந்தை திருமணம் பற்றிய விவாதங்கள் வேகம் பெற்றன. இறுதியில் பெண்களுக்கான திருமண வயதை உயர்த்துவது குறித்தும் முடிவெடுக்கப்பட்டது. மேலும், பல பெண்கள் ஆர்வமாகக் கல்வியும் கற்கத் தொடங்கினர். விவாகரத்து பெற்ற பிறகு, லண்டன் சென்ற ருக்மாபாய் அங்குள்ள லண்டன் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் மருத்துவம் படித்தார். படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய அவர், 35 ஆண்டுகள் சூரத்தில் உள்ள பெண்கள் மருத்துவமனையில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post