உங்க வங்கி கணக்கை பயன்படுத்தாம இருக்கீங்களா?.. ரிசர்வ் வங்கி எடுக்கும் முக்கிய முடிவு..நோட் பண்ணுங்க

post-img
சென்னை: ஆன்லைன் மோசடிகளைத் தடுக்கும் வகையில், செயல்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட மூன்று வகையான வங்கிக் கணக்குகளை மூடுவதற்கு ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எந்தவொரு பணப் பரிவர்த்தனையும் இல்லாத வங்கிக் கணக்குகள், நீண்ட காலமாக பூஜ்ஜிய தொகையை மட்டும் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சமீபகாலமாக மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஏடிஎம் கார்டின் எண்கள், வங்கி தொடர்பான விவரங்கள், பாஸ்வேர்டு, ஒன் டைம் பாஸ்வேர்டு, ஆதார், பான் தொடர்பான உள்ளிட்ட விவரங்களை முன்பின் அறியாத நபர்களிடம் தெரிவிக்கக் கூடாது என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், படித்தவர்களைக் கூட ஏமாற்றும் அளவுக்கு புதுப்புது ரூட்டுகளில் யோசித்து மோசடி சம்பவங்களை சில கும்பல்கள் செயல்படுத்தி வருகின்றன. அண்மைக் காலமாக உங்கள் பெயரில் ஒரு கூரியர் வந்துள்ளது. அதில், போதைப் பொருள்கள், போலி பாஸ்போர்டுகள் உள்ளன. உங்கள் வங்கிக் கணக்கில் கணக்கில் வராத, மோசடி பணங்கள் உள்ளன என்று போலீஸ் போல வேடமிட்டுக்கூறும் நபர்களிடம் பல பேர் ஏமாறும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளை மூடுவதற்கு ரிசர்வ் வங்கி புதிய நெறிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில், மூன்று வகையான வங்கிக் கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளை குறிவைத்து மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருவதால் அந்த வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, மினிமம் பேலன்ஸ் கூட வைக்காமல், நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் உள்ள கணக்குகளை மூன்று வகைகளாகப் பிரித்து அவற்றி மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் எந்தவொரு பணப் பரிவதர்த்னையும் செய்யப்படாத வங்கிக் கணக்குகள் செயல்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மோசடி கும்பல்கள் இந்த வங்கிக் கணக்குகளை குறிவைத்து மோசடியில் ஈடுபடுவதால், அந்த வகை கணக்குகளை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, 12 மாதங்களுக்கு மேலாக பணப் பரிவர்த்தனைகள் செய்யப்படாத கணக்குகள் செயலற்ற கணக்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையான வங்கி கணக்குகளையும் நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கணக்குகளை மீண்டும் பராமரிக்க விரும்புவோர் வங்கிக் கிளைகளை மீண்டும் நேரடியாக அணுகி பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல நாட்களாக இருப்புத் தொகை இல்லாமல் இருக்கும் ஜீரோ பேலன்ஸ் கணக்குகளை நிறுத்திவைக்கவும் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்த மூன்று வகையாக கணக்குகளை தவறான செயல்களுக்குப் பயன்படுத்துவதை தடுப்பதற்காக இந்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வருடமாக வங்கிக் கணக்கை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் உடனடியாக ஒரே ஒரு பரிவர்த்தனையை மேற்கொள்வதன் மூலம் இந்த நடவடிக்கை தடுத்து உங்கள் வங்கிக் கணக்கை மீண்டும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 2 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பின் வங்கிக் கிளையை நேரடியாக அணுகி உங்களுடைய அக்கவுண்டை புதுப்பித்துக் கொள்ளலாம். அதே சமயம், உங்கள் வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் எனும் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post