2025 ஜனவரி நாள் குறிச்சாச்சு.. உலகின் மிகப்பெரிய பனிப்பாறை.. அடுத்த மாதமே உடைகிறது.. போச்சு

post-img
சென்னை: உலகின் மிகப்பெரிய பனிப்பாறை, A23a, அடுத்த ஒரு மாதத்திற்குள் உடைந்து விடும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஆகஸ்ட் 1986 இல் அண்டார்டிகாவில் உள்ள Filchner-Ronne ஐஸ் பாறையில் இருந்து A23a உடைந்து பிரிந்தது. ஏறத்தாழ 34 ஆண்டுகள் பனிப்பாறையாக இருந்தது. அதன்பின் மீண்டும் இத்தனை வருடங்கள் கழித்து இந்த மிகப்பெரிய பனிப்பாறை உடைய உள்ளது. ஜனவரி மாதமே இந்த பனிப்பாறை உடையும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் 30 ஆண்டுகளுக்கும் எங்கும் நகராமல் உறைந்து இருந்த உலகின் மிகப்பெரிய பனிப்பாறை A23a உடைய தொடங்கி உள்ளது. இந்த பாறை இனி மேலும் உடையும். இனி கொஞ்சம் கொஞ்சமாக சிறிய சிறிய அளவில் உடையும். அதோடு இந்த பனிப்பாறை தெற்கு பெருங்கடலில் மிதக்கத் தொடங்கியது. தற்போது உள்ள லண்டனை விட இருமடங்கு அளவு கொண்டது ஆகும் இந்த பனிப்பாறை. இவ்வளவு பெரிதாக இனி அந்த பாறை நீடிக்க முடியாது. அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக இது மேலும் மேலும் உடையும். இதன் காரணமாக கடலில் மேலும் நீர் மட்டம் அதிகரிக்கும். உலக வெப்பமயமாக்கலுக்கு எடுத்துக்காட்டாக இந்த மாற்றம் அமைந்துள்ளது. இந்த பாறை உடையாமல் நகர்வது ஒரு வகையில் கடலில் உள்ள உயிரினங்களுக்கு நல்லது என்றாலும் பாறைகள் உடைந்து கரைவது எதிர்காலத்திற்கு சிக்கலாகும். சுமார் ஒரு டிரில்லியன் டன் எடையுள்ள இந்த பாரிய பனிப்பாறை, 1986 ஆம் ஆண்டு அண்டார்டிகாவின் ஃபில்ச்னர் பனிக்கட்டியில் இருந்து உடைந்தது. அப்போது சில வாரங்கள் கடலில் இந்த பாறை நகர்ந்தது. அதன்பின் வெட்டெல் கடலில் தெற்கு ஓர்க்னி தீவுகளுக்கு அருகில் உறைந்தது. தற்போது மீண்டும் உடைந்து அந்த பாறை நகர தொடங்கி உள்ளது. வெப்பநிலை உயர்வு காரணமாக இப்படி நடந்திருக்கலாம் என்று சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் சர்வதேச அளவில் ஐநா தந்த காலநிலை எச்சரிக்கை பழிக்க தொடங்கி உள்ளது. காலநிலை பாதிப்புகள் தமிழ்நாட்டிலும் வெளிப்படையாக தெரிய தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம். இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.... கடந்த சில நாட்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை. ஆம், காலநிலை மாற்றம் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டதாகவும், நாம் காலநிலை மாற்றத்தின் கோட் ரெட் காலத்தில் இருப்பதாகவும் இந்த ஆய்வு அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் இந்த நூற்றாண்டு முழுக்க கடலோர பகுதிகளில் கடல் மட்டம் தொடர்ந்து உயரும். இதனால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து வெள்ளங்கள், புயல்கள் ஏற்படலாம். கடலோரத்தை ஒட்டி இருக்கும் சிறு சிறு கிராமங்கள் மொத்தமாக அழிந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன. பல கடல் கரைகள் காணாமல் போகும். 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை முன்பு ஏற்பட்டு வந்த கடல் சார்ந்த வெள்ளம், கடல் சார்ந்த பேரிடர்கள் இனி எல்லா வருடமும் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன. எதிர்காலம் ஆபத்து நிறைந்ததாக காணப்படுகிறது. வெப்பநிலை இனி வரும் நாட்களில் உயர உயர மேலும் மோசமான காலநிலை ஆபத்துகள், பேரிடர்கள் ஏற்படும், பனிப்பாறைகள் வேகமாக உருகும். நினைத்ததை விட காட்டுத்தீகள் வேகமாக பரவும். வெப்ப காற்று தாக்குதல்கள் இனி அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது ஆர்க்டிக் கடலில் ஐஸ் உருகவும், அங்கு மின்னல் பாதிப்புகளை ஏற்படுத்தவும், பனி பாறைகள், படலங்கள் உருகவும் வழி வகுக்கும் என்று ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளன. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post