ஹோம் லோன் இருக்கா? "இந்த" ஒரு விஷயத்தை செய்யுங்க.. சிரமமே இல்லாமல் சட்டென வீட்டு கடனை அடைக்கலாம்

post-img
சென்னை: இப்போதெல்லாம் ஹோம் லோன் இல்லாதவர்களைப் பார்ப்பதே அரிதாகவே இருக்கிறது. ஆரம்பத்தில் ஏதோ ஒரு ஆர்வத்தில் ஹோம் லோன் எடுப்போர் காலம் முழுக்க அதற்கு இஎம்ஐ கட்டியே சிரமப்படுகிறார்கள். பெரிதாக எந்தவொரு சிரமமும் இல்லாமல் ஈஸியாக ஹோம் லோனை முடிப்பது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம். இந்த காலத்தில் படித்து முடித்து வேலைக்குச் செல்ல தொடங்கியதும் பலருக்கும் இருக்கும் கேள்வி.. சொந்தமாக ஒரு வீடு வாங்கியாச்சா என்பது தான். இதுபோன்ற கேள்விகளுக்காகவே இளைஞர்கள் வீட்டை வாங்கிவிடுகிறார்கள். அதிலும் இப்போது இருக்கும் விலைவாசிக்கு மிடில் கிளாஸ் மக்கள் யாராலும் முழு பணம் கொடுத்து வீடு வாங்க முடியாது. இதனால் பெரும்பாலானோர் வங்கியில் கடன் வாங்கியே வீடுகளை வாங்குகிறார்கள். இருப்பினும், இதுபோல வீடு வாங்குவோர் உழைக்கும் காலம் முழுக்க லோன் கட்ட வேண்டி இருக்கிறது. 26 வயதில் இருக்கும் ஒருவர் லோன் எடுத்தால்.. அவர் கிட்டதட்ட ஓய்வு பெறும் வரை, 30 ஆண்டுகள் இப்படி லோன் கட்டிக்கொண்டே இருக்க வேண்டி இருக்கும். ஏன் தான் வீடு வாங்கினோம் என நினைக்கும் அளவுக்குத் தொடர்ச்சியாக இஎம்ஐ கட்ட வேண்டி இருக்கிறது. ஆனால், கவலை வேண்டாம்.. சில விஷயங்களை நீங்கள் பின்பற்றினால் ஹோம் லோனை ரொம்ப சீக்கிரமே அடைத்துவிடலாம்.. இதற்கு நீங்கள் ரொம்பவும் மூளையை எல்லாம் கசக்கிப் பிழியத் தேவையில்லை.. சில அடிப்படை விஷயங்களைப் பின்பற்றினாலே போதும். ஆனால், அதற்கு முன்பு ஹோம் லோன் மட்டும் கட்ட ஏன் இவ்வளவு லேட் ஆகிறது என்பதை நாம் பார்க்கலாம். மற்ற கடன்களைப் போல இல்லாமல்.. ஹோம் லோன் என்பது ரொம்பவே பெரிய தொகை.. மேலும், பல ஆண்டுகள் நாம் அதைக் கட்ட வேண்டி இருக்கும். தொடக்கத்தில் இருந்தே நாம் வாங்கும் மொத்த தொகைக்கும் வட்டி போடுவார்கள். இதனால் ஆரம்பத்தில் நாம் செலுத்தும் தொகையில் பெரும்பாலான தொகை வட்டிக்கே போய்விடும். சொற்ப தொகை மட்டுமே அசலில் கழியும். இதன் காரணமாகவே ஹோம் லோன் அடைப்பதில் சிரமம் இருக்கும். உதாரணமாக நீங்கள் ரூ. 50 லட்சத்திற்கு ஹோம் லோன் எடுக்கிறார்கள்.. 7.5% வட்டியில் 30 ஆண்டுகள் கட்டுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். அப்படிப் பார்த்தால் நாம் மாதம் ரூ.34,961 இஎம்ஐ செலுத்த வேண்டி இருக்கும். அப்படிப் பார்த்தோம் என்றால் முதலாம் ஆண்டு நாம் 4.19 லட்சம் கட்டுவோம். ஆனால், அதில் 3.73 லட்சம் வட்டிக்கே போய்விடும். வெறும் 46,092 மட்டுமே அசலில் கழியும். இப்படி தொடக்கத்தில் வட்டிக்கே அதிகப் பணம் செல்வதாலேயே ஹோம் லோனை அடிக்க அதிக காலம் ஆகிறது. சரி, விஷயத்திற்கு வருவோம் ஹோம் லோனை எப்படி சீக்கிரம் முடிக்கலாம்.. முதலில் வீடு வாங்கும் போது முடிந்த அளவுக்குக் கையில் இருக்கும் பணத்தை initial paymentஆக கொடுத்துவிடுங்கள். வட்டி குறைவு என முழு தொகையையும் வங்கிக் கடனாக வாங்கினால் அதை பெரும் தலைவலியாக மாறிவிடும். எனவே, முடிந்த வரை பெரிய தொகையை initial paymentஆகக் கொடுங்கள். அடுத்து முக்கியமானது ஆண்டுக்கு ஒரு இஎம்ஐ கூடுதலாகச் செலுத்துங்கள்.. வெறும் ஒரு இஎம்ஐ தொகையைக் கூடுதலாகச் செலுத்தினாலே போதும். அது உங்கள் லோனை மிகப் பெரியளவுக்குக் குறைக்கும். அதெப்படி என்ற சந்தேகம் வரும். முன்பு குறிப்பிட்ட ஹோம் லோனையே நாம் எடுத்துக்கொள்வோம். அதில் மாதம் ரூ.34,961 செலுத்தினாலும் கூட முதலாம் ஆண்டில் ரூ. 46,092 மட்டுமே அசலில் கழியும். அதேநேரம் ஒரு கூடுதல் இஎம்ஐ தொகையைச் செலுத்தினால் வட்டி எதுவும் இருக்காது என்பதால் அது அப்படியே அசலில் கழியும். அதாவது நீங்கள் செலுத்தும் ஒரு கூடுதல் இஎம்ஐ என்பது நீங்கள் முதலாம் ஆண்டு ஒட்டுமொத்தமாகச் செலுத்திய அசலில் கிட்டதட்ட 75%ஐ கவர் செய்யும். இதனால் எப்போதும் முடிந்தவரை ஒரே ஒரு இஎம்ஐ தொகையைக் கூடுதலாகச் செலுத்துங்கள். அதேபோல போனஸ், வரி ரிட்டர்ன் அல்லது எதிர்பாராத விதமாக எதாவது வருவாய் வருவது எனக் கூடுதல் தொகை கையில் கிடைத்தால் அதை ஹோம் லோனாகவே செலுத்துங்கள். அப்படிச் செலுத்தினால் நீங்கள் கனவில் கூட யோசிக்கவே முடியாத அளவுக்கு படுவேகமாக ஹோம் லோன் இஎம்ஐ குறையும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post