லாரி, கார், பைக்.. மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் ஒரே நேரத்தில் 80 வாகனங்கள் பஞ்சர்.. அசர வைக்கும் காரணம்

post-img
மும்பை: சமீபத்தில் மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு லாரிகள் உட்பட 80 க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து பஞ்சர் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி அடுத்தடுத்து வாகனங்கள் பஞ்சர் ஆன சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின் உள்ள காரணம்தான் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. முக்கியமாக மும்பை நோக்கி செல்லும் பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு லாரிகள் உட்பட 80 க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து பஞ்சர் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள மாலேகான் மற்றும் வனோஜா சுங்கச்சாவடி இடையே நடந்தது. சாலையில் சென்று லாரி ஒன்று முதலில் பஞ்சர் ஆகி உள்ளது. அதை தொடர்ந்து அந்த சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் கிராஸ் ஆக ஆக பஞ்சர் ஆகி உள்ளது. லாரி, பைக், கார் என்று அந்த சாலையை கடந்த வாகனங்கள் அடுத்தடுத்து பஞ்சர் ஆகி உள்ளன. குறிப்பிட்ட ஒரு லேனில் உள்ள வாகனங்கள்தான் அடுத்தடுத்து பஞ்சர் ஆனது. இதையடுத்து அதற்கு காரணம் என்ன என்று விசாரிக்கப்பட்டது. அடுத்தடுத்து வாகனங்கள் பஞ்சர் ஆனதை வைத்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். என்ன காரணம் என்று தெரியாமல் சாலையில் திகைத்து நின்றனர். சாலையில் விழுந்த இரும்பு பலகை ஒன்றின் காரணமாக வாகனங்கள் பஞ்சர் ஆனதாக கூறப்படுகிறது. அந்த பலகையில் பல பக்கங்களில் ஆணிகள் இருந்துள்ளன. அந்த வழியாக சென்ற ஸ்கிராப் வாகனங்களில் இருந்து இந்த பலகை விழுந்து இருக்கலாம் அல்லது விஷமிகள் யாராவது திட்டமிட்டு அதை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. முக்கியமாக மும்பை நோக்கி செல்லும் பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த நெடுஞ்சாலை, மகாராஷ்டிரா உள்ளே செல்லும் 701 கிமீ நீளமுள்ள ஆறுவழி விரைவுச் சாலையாகும். இது மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரமான நாக்பூருடன் மும்பையை இணைக்கிறது. 55,000 கோடி செலவில் கட்டப்பட்ட இந்தத் திட்டம் இந்தியாவின் மிக நீளமான பசுமை வழி சாலைகளில் ஒன்றாகும். இரும்பு பலகை மூலம் பஞ்சர் ஏற்படுத்தப்பட்டது எப்படி.. அதற்கு என்ன காரணம் என்பது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எதிர்காலத்தில் இதுபோன்ற ஆபத்துகளை எவ்வாறு தடுக்கலாம் என்ற விசாரணையும் நடந்து வருகிறது. குப்பை கொட்ட செல்லும் சென்ற ஸ்கிராப் வாகனங்களில் இருந்து இந்த பலகை விழுந்து இருக்கலாம் அல்லது விஷமிகள் யாராவது திட்டமிட்டு அதை செய்து இருக்கலாம் என்று கூறப்படுவதால் சிசிடிவி கேமரா காட்சிகள் விசாரணை செய்யப்படுகின்றன. சம்ருத்தி மஹாமார்க் அல்லது நாக்பூர்-மும்பை விரைவுச்சாலை மகாராஷ்டிரா எக்ஸ்பிரஸ்வே-2 (ME-2) என்று அழைக்கப்படுகிறது. 6-லேன் அகலம் கொண்ட சாலை ஆகும் இது. 701-கிமீ நீளம் கொண்டது. இன்னும் முழுமையாக கட்டப்படாத நிலையில் கட்டப்பட்ட பாதையில் மட்டும் பயணம் அனுமதிக்கப்படுகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post