தேனியில் பிரியா கவனிச்சிட்டாங்க! செல்போன் வந்ததுமே ஓடிப்போய் "ரகசியமாய்" பேசினாராம் கணவர்! அவ்ளோதான்

post-img
தேனி: பலவித நன்மைகள் இருந்தாலும்கூட, உறவுகளை சீர்குலைக்கும் அளவுக்கு செல்போன்கள் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. செல்போன் மோகம் காரணமாக, குடும்பங்களில் சிக்கல்களும், தகராறுகளும் வெடித்தபடி உள்ளன. தேனியிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கணவன் ஒரு பெண்ணிடம் செல்போனில் பேசினாலோ அல்லது மனைவி ஒரு ஆணிடம் செல்போனில் பேசினாலோ சந்தேகம் வலுத்து விவாகரத்துவரை சென்றுவிடுகிறது. எப்படி மது பழக்கத்துக்கு ஆளானவர்கள், அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்களோ, அதுபோல செல்போன் என்ற போதையில் பலரும் சிக்கி விடுகிறார்கள். தம்பதி: கணவர் என்னிடம் பேசுவதில்லை, பெரும்பாலும் செல்போனில்தான் அதிகநேரம் பேசுகிறார் என்று மனைவி குற்றஞ்சாட்டுவதும், வீடு, குழந்தைகளைகூட கவனிக்காமல், எந்நேரமும் செல்போனிலேயே மனைவி மூழ்குவதாக கணவன் குற்றஞ்சாட்டுவதும் தொடர்கதையாகிவிடுகிறது.. சிலசமயம் கொலைவெறி தாக்குவதல் வரை இந்த விவகாரம் சென்றுவிடுகிறது. சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. 33 வயதுடைய பேபி யாதவ் என்ற பெண் செல்போனில் அதிக நேரம் செலவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதை அவரது பிரதீப் சிங், பலமுறை கண்டித்துள்ளார். அந்த பெண் கேட்காததால், அவருடைய பெற்றோரிடம் கணவர் புகார் உள்ளார். இனிமேல் செல்போனில் மூழ்கினால், செல்போனை பறித்துவிடுமாறு, அப்பெண்ணின் பெற்றோர், பிரதீப் சிங்கிடம் அறிவுறுத்தினார்கள். மயக்கமருந்து: அதன்படியே, சம்பவத்தன்றும் நீண்ட நேரம் போனில் மூழ்கியதால், மனைவி பேபியின் செல்போனை கணவர் பிடுங்கிவிட்டார். இதனால் கோபமடைந்த பேபி, கணவருக்கு மயக்கமருந்து தந்து, படுக்கையில் கட்டிவைத்து, எலெக்ட்டிரிக் ஷாக் தந்துவிட்டார். பிறகு, பலமுறை கிரிக்கெட் மட்டையால் கணவனின் தலையிலும், உடலிலும் தாக்கி உள்ளார். இந்த கொடுமையை பார்த்து இந்த தம்பதியின் 14 வயது மகன், தாயை தடுக்க முயன்றபோது மகனையும் தாக்கியுள்ளார். போலீஸ் வரை இந்த விவகாரம் சென்று, மிகப்பெரிய பரபரப்பை அப்போது உண்டுபண்ணியிருந்தது. தேனி மனைவி: இதோ நம்முடைய தேனி மாவட்டத்திலும் நேற்று ஒரு சம்பவம் நடந்துள்ளது.. கடமலைக்குண்டு அருகே உள்ள துரைச்சாமிபுரம் என்ற பகுதியில் வசித்து வருகிறார் தினகரன்.. இவருக்கு 23 வயதாகிறது.. டிரைவராக பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகிவிட்டது. மனைவி பிரியாவுக்கும் 23 வயதாகிறது. வீட்டில் இருக்கும் பிரியா அடிக்கடி செல்போனில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.. இதனை கவனித்த தினகரன், அதிக நேரம் செல்போனில் பேச கூடாது என்று கூறி பிரியாவை கண்டித்துள்ளார். இதனால் தினகரன் மீது பிரியா, கடும் எரிச்சலில் இருந்துள்ளார். செல்போன்: இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தினகரன் வீட்டில் இருக்கும்போது, அவரது செல்போனிற்கு அழைப்பு வந்துள்ளது. அப்போது தினகரன், செல்போனை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே சென்று பேசினாராம். இதனை பார்த்த பிரியா, என்னை செல்போன் பேசகூடாது என்று சொல்லிட்டு, நீ மட்டும் மறைமுகமாக வெளியே சென்று செல்போன் பேசலாமா? என்று கேட்டு உச்சக்கட்ட கோபமடைந்துள்ளார். யாருடன் தனியாக செல்போன் பேசுகிறாய்? என்று கேட்டு கணவரிடமிருந்த செல்போனை பறித்து கீழே வீசியிருக்கிறார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த தினகரன், கீழே கிடந்த செல்போனை எடுக்க முயன்றார்.. வழக்கு பதிவு: அப்போது பிரியா, கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக கணவரை குத்திவிட்டார்.. இதில், அவரது கை மற்றும் நெஞ்சில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.. இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து, தினகரன் போலீசில் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில், பிரியா மீது கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post