கொடைக்கானலில் பரபரப்பு.. பள்ளி மாணவியை "ஐ லவ் யூ" சொல்ல வைத்து.. திண்டுக்கல்லில் வட்டமடித்த வீடியோ

post-img
திண்டுக்கல்: பள்ளி மாணவி ஒருவர், வீடியோவில் ஐ லவ் யூ சொல்லப்போய், அந்த வீடியோ இணையத்தில் வேக வேகமாக பரவி, ஏகப்பட்ட பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திவிட்டது. இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டும் வருகிறார்கள்.. அப்படி என்ன நடந்தது கொடைக்கானலில்? திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் செயல்பட்டு வருகிறது அந்த தனியார் பள்ளி.. இங்கு 7ம் வகுப்பு படிக்கும் மாணவியும், அவரது தோழிகளும், கடந்த மாதம் 16ம் தேதி ஒரு மொபைல் ஆப்பை தங்களது செல்போனில் டவுன்லோடு செய்துள்ளனர். புதிய ஆப் என்பதால், அதில் வீடியோ கால் மூலம் பேசுவது, கமெண்ட்களை பதிவு செய்வதில் ஆர்வமாக இருந்து வந்துள்ளனர்.. இந்த ஆப்பில் திடீரென ஒரு மர்ம நபர் சம்பந்தப்பட்ட மாணவியை தொடர்பு கொண்டு, "என்னுடைய போன் நம்பர் உனக்கு அனுப்புகிறேன். அதில் வீடியோ மூலம் எனக்கு "ஐ லவ் யூ" சொல்ல முடியுமா? அதுக்கு உனக்கு தைரியம் இருக்கா?" என்று கேட்டுள்ளார்.. அத்துடன் மாணவியை விடாமல் டார்ச்சரும் செய்து வந்துள்ளார். ஐ லவ் யூ: இதனால் எரிச்சலடைந்த மாணவி, "உன்கிட்ட எனக்கென்ன பயம்? சொல்றதுக்கு எனக்கு தைரியம் உள்ளது.. ஐ லவ் யூ" என்று கூறி வீடியோ அனுப்பி வைத்திருக்கிறார்.. மாணவி ஐ லவ் யூ சொன்ன அந்த வீடியோவை, யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து சோஷியல் மீடியாவிலும் அந்த மர்ம நபர் பதிவிட்டுவிட்டார்.. வீடியோ அப்லோடு செய்ததுமே., கிட்டத்தட்ட 4000 மேற்பட்டோர் அதை பார்த்துள்ளனர்... அந்தவகையில், இந்த வீடியோவை, சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோரும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.. உடனடியாக இதுகுறித்து மகளிடம் விசாரித்துள்ளனர். அதற்கு மாணவி, நடந்த விஷயத்தை கூறி, அந்த மர்ம நபர் தந்து வந்த டார்ச்சரையும் சொல்லி அழுதுள்ளார். ஆவேசம்: இதைக்கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர், உடனடியாக கொடைக்கானல் போலீல் புகார் தந்தனர்.. இந்த புகாரின்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், மாணவியை இவ்வாறு சீண்டியது உத்தரகாண்ட் நிலத்தை சேர்ந்த 23 வயது தினேஷ்ராம் என்பது தெரியவந்தது.. அரியானாவில் உள்ள குர்கிராம் என்ற பகுதியில் இருந்து, இந்த மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாணவியை டார்ச்சர் செய்த இளைஞர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதிரடி கைது: பின்னர், கொடைக்கானல் தனிப்படை போலீசார் அந்த இளைஞனை தேடி உத்தரகாண்ட் விரைந்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, அந்த இளைஞரை சுற்றி வளைத்தனர்.. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு கல்லூரியில், இளங்கலை வணிகவியல் படித்து வருகிறாராம் அந்த இளைஞர்.. இறுதியில், அந்த இளைஞரை அங்கேயே கைது செய்து, பிறகு கொடைக்கானல் அழைத்து வந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயிலில் அடைத்துள்ளனர். பெண்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்றும் சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். வார்னிங்: அதேபோல, ஆன்லைனில் வரும் லிங்குகள் மூலம் தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், அதன் மூலம் உங்களது சுயவிவரங்கள் மற்றும் வங்கி கணகணக்கு தொடர்பான அனைத்து விவரங்களும் திருடப்பட்டு உங்கள் பணம் மோசடி நடைபெற அதிக வாய்ப்புள்ளதாகவும் அறிவுறுத்தி கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், புதிய செயலியை டவுன்லோடு செய்து, பள்ளி மாணவி பரிதவித்த சம்பவம் கொடைக்கானலில் நடந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post